பொறுப்பாளர் மீது வழக்கு

தொண்டி: தொண்டி பஸ்ஸ்டாண்ட் அருகே நாம்தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் ராமநாதபுரம் மாவட்டம் 4 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.

இதில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி போஸ்டர்கள், கொடிகள் கட்டப்பட்டிருந்தன. தேர்தல் நிலைகண்காணிப்பு குழு அலுவலர் மணிகண்டன் புகாரில், தொண்டி போலீசார் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் ராஜசேகரன் மீது வழக்குப் பதிந்தனர்.

Advertisement