வலையில் சிக்கிய ஆமை கடலில் விடப்பட்டது
தொண்டி: தொண்டி கடலில் வலையில் சிக்கிய ஆமையை மீட்ட மீனவர்கள் உயிருடன் கடலில் விட்டனர்.தொண்டி புதுக்குடியை சேர்ந்த ராமகிருஷணன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் அவரோடு உதயகுமார், பூமிநாதன், கணேசன், மணி ஆகிய மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். பாசிபட்டினத்தில் இருந்து 4 நாட்டிகல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்பகுதியில் ஏற்கனவே மற்ற மீனவர்கள் விரித்திருந்த வலையில் 50 கிலோ ஆமை சிக்கி உயிருக்கு போராடியது.
மீனவர்கள் மூச்சு கவசத்துடன் கடலில் இறங்கி ஆமையை மீட்டு உயிருடன் கடலில் விட்டனர். மீனவர்கள் கூறுகையில், இனப் பெருக்கத்திற்காக கடற்கரைக்கு வரும் ஆமைகள் இம்மாதிரி வலைகளில் சிக்குவது வழக்கம். இந்த ஆமை பேராமை வகையை சேர்ந்தது என்றனர்.
--
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேயர் பிரியா மற்றும் 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்கள் ஏமாற்றம்; உழைப்புக்கு மரியாதை இல்லை என புலம்பல்
-
முதல்வர் திறந்து வைத்த தங்கும் விடுதிக்கு உள்ளூர் திட்டக்குழுமம் அனுமதி இல்லை; மின் இணைப்பு பெற முடியாமல் கோயில் நிர்வாகம் தவிப்பு
-
அன்பழகன் பேரனுக்கு வாய்ப்பு மறுப்பு
-
திருத்தணி புதிய பேருந்து நிலையத்தில் நாளை முதல் பஸ்கள் இயக்கப்படும் கமிஷனர் அறிவிப்பு
-
அ.தி.மு.க., வேட்பாளருக்கு கும்மிடியில் உற்சாக வரவேற்பு
-
தே.மு.தி.க.,வினர் கொண்டாட்டம்
Advertisement
Advertisement