மைல்கல்லில் எழுத்துப்பிழை; தமிழுக்கு வந்த சோதனை!
திருப்பூர்: மாநில நெடுஞ்சாலையில் புதுப்பிக்கப்படும் மைல் கல்லில் எழுதப்பட்டுள்ள ஊர் மற்றும் இடங்களின் பெயரில், எழுத்துப்பிழை இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகம் முழுக்க, மாநில நெடுஞ்சாலை சார்பில், சாலை விரிவாக்கம் மற்றும் புதுப்பிப்பு பணி நடந்து வருகிறது. ஆங்காங்கே உள்ள மைல் கற்களும் புதுப்பிக்கப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்டு வருகின்றன. இதில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் - தாராபுரம் இடைபட்ட மாநில நெடுஞ்சாலையில், (எஸ்.எச்.174-ஏ) உள்ள மைல் கல்லில், 'கோவை விமான நிலையம்' என்பது, 'கேவை' விமான நிலையம் எனவும், 'சோமனுார்' என்ற ஊரின் பெயரில், 'சேமனுார்' எனவும் எழுதப்பட்டுள்ளது.
இதேபோல, இன்னும் பல மைல் கல்லில் எழுத்துப்பிழை உள்ளது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழை வளர்க்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறும் தமிழக அரசு, முதலில், தங்கள் துறை சார்ந்த பணிகளிலேயே எழுத்துப்பிழை இருப்பதை தவிர்க்க வேண்டும் எனக்கூறி வருகின்றனர்.
இது குறித்து, பா.ஜ. மாநில பொது செயலாளர் முருகானந்தம் கூறுகையில், ''கடந்த, 50 ஆண்டுகாலமாக தமிழகத்தில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் மாறி மாறி இருந்து வரும் தி.மு.க. தமிழை வளர்க்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக கூறி வருகிறது. அது எந்தளவில் இருக்கிறது, என்பதற்கு, நெடுஞ்சாலையில் உள்ள மைல் கற்களே சாட்சி.
ஹிந்தியை, தார் வைத்து அழித்து வருபவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் 'திராவிட மாடல்' தி.மு.க. தமிழை வளர்ப்பது இந்தளவில் தான் உள்ளது. தமிழை வளர்க்காமல், புல்டோசர் வைத்து நசுக்குவது போல, தமிழ்க் கொலை நடந்துள்ளது,'' என்றார்.
இதுவே மத்திய நெடுஞ்சாலையில் இருக்கின்றது என்றால் ஆளாளுக்கு எகிறி குதித்திருப்பார்கள்.
தமிழை வளக்கும் லட்சணம்
பெரும்பாலும் . டி.வி. நிகழ்சி யில் . ல: ழ : உச்சரிப்பு
கொடுமை
விடியல் ஆட்சியின் தமிழ் வளர்ச்சி.
அவ்வளவு தான் தமிழ் தெரியும் நமது வட இந்தியா தொழிலாளிக்கு... விடுங்க பாஸ்
இந்த வேலைக்குக்கூட ஹிந்திக்காரன் வந்ததால் வந்த வினை..
நல்லா வசாரிச்சு பாருங்க ! குன்றியம் வடக்கனுக்கு இந்த எலுதர காண்டாக்ட் குடுத்திருக்கும். அவனுக்கு இந்தியே கடாமுடாதான்.அப்புறம் அவன் தமில்லே எழுதுனா இப்படித்தான் இருக்கும்.அன்னிக்கே பாதிரியார் தமில் இனி மெல்ல சாகும்னு சொன்னாறு. அது இதுதான் போல.
பெயிண்ட் தரம் மிக குறைவு எனவே எல்லாம் அழிந்து விடும். பிழைகள் வெளியில் தெரியாது.
நம்ம துண்டு சீட்டார் எழுதி கொடுத்தது போல் தெரிகிறது.
கல்லூரி படித்தவனுக்கு கூட தமிழில் சரியாக பேச, எழுத தெரியவில்லை. இப்போது அரசியலில் புகுந்து உள்ள ஒரு நடிகருக்கு எழுதி கொடுத்ததை வாசிக்கவே அந்த அளவு கஷ்டப்படுகிறார். உச்சரிப்பு அந்த அளவு மோசம்.
போலி திராவிட கூட்டத்தினர், தமிழ் தமிழ் என்று அரசியல் வியாபாரம் செய்து தமிழையே மறக்க செய்துவிட்டனர்.
கோ என்பதில் கால் இல்லாததால் கே. சோ என்பதில் கால் இல்லாததால் சே.
சொந்த காலில் இல்லாததால், அந்த எழுதுபவர் கால் எழுத பிடிக்காமல் விட்டிருக்கலாம்.
தமிழ் ஒரு காட்டுபிரண்டி மொழி...பெரியார் சொன்னது. அவருக்கு தமிழ் சரிவர எழுத படிக்க தெரியாது. அதனால் அவர் சொன்னதை தமிழ் என்று தொண்டர்கள் திருத்தம் செய்தார்கள். நாம் வாயை திறந்தால் கொலையும் செய்வார்கள். ஆகவே அவர்கள் சொல்வதுதான் தமிழ்மேலும்
-
செங்கோட்டையன் முதல் தூசி மோகன் வரை... தவெக பட்டியலில் இடம்பிடித்த மாற்றுக்கட்சியினர்
-
உட்கட்சி பூசலால் காங்., கட்சிக்கு தொகுதியை தாரை வார்த்த தி.மு.க., கடலுாரில் நிர்வாகிகள் 'அப்செட்'
-
குருத்தோலை பவனி
-
அன்னதானம் வழங்கல்
-
தி.மு.க., பிரசார வாகனம் ரெடி
-
7 தொகுதிகளுக்கான த.வெ.க., வேட்பாளர் பட்டியல் வெளியீடு