'சாம்பியன்' ஆன இளம் 'பாக்சிங்' வீரர் சாம்பியன் குத்துச் சண்டை போட்டியில் சாம்பியன் ஆன மாணவன்
பொன்னேரி:மாநில அளவில் நடந்த குத்துச்சண்டை போட்டியில், பங்கேற்று சாம்பியன் பெற்ற, தனியார் பள்ளி மாணவன் தேசிய போட்டிக்கு தகுதி பெற்று உள்ளார்.
மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரன், 13. இவர் அதே பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அங்குள்ள, 'ஜெய் பாக்சிங்' கிளப்பில் குத்துசண்டை பயிற்சி பெற்று பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன், சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த மாநில அளவிலான, 15 வயதினருக்கான 61 - 64 கிலோ எடைபிரிவு குத்துசண்டை போட்டியில் பங்கேற்றார். இதில், மாநிலம் முழுதும் இருந்து, 50க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
இறுதிப் போட்டியில் சென்னை மாவட்ட வீரருடன் மோதி, மூன்றாவது சுற்றில் வெற்றி பெற்று, தங்கம் வென்றார்.
இதன் மூலம், ஏப். 4, 11 தேதிகளில், ஹரியானாவில் நடக்கும் தேசிய போட்டிக்கு தகுதி பெற்று உள்ளார்.
தங்கம் வென்ற விக்னேஸ்வரனை, பள்ளி தாளாளர், ஆசிரியர்கள், பயிற்சியாளர் ஜெய் மற்றும் பெற்றோர் பாராட்டினர்.
மேலும்
-
இன்று இனிதாக (29.03.2026) விருதுநகர்
-
தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
-
கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதியில் தொடரும் புதுமுக வேட்பாளர் 'பார்முலா'
-
டாப்ஸ், சிறப்பு டெட் திட்டங்களால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு செக் வைக்கும் தி.மு.க.,
-
கல்குவாரி, கிரஷர் லாரிகளால் 3 ஆண்டுகளில் 30 பேர் உயிரிழப்பு!
-
வேட்பாளர் பட்டியலுடன் கோவிலில் வழிபட்ட முதல்வர்