ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
சிவகங்கை:சிவகங்கையில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்காக நடந்த பயிற்சி வகுப்பினை கலெக்டர் பொற்கொடி பார்வையிட்டு ஓட்டுச்சாவடியில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் பணிகள் குறித்து அறிவுரை வழங்கினார்.
ஓட்டுச்சாவடிகளில் பல்வேறு நிலைகளில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு தேர்தல் தொடர்பான முதல் பயிற்சி வகுப்பு நடந்தது. காரைக்குடி சட்டசபை தொகுதிக்கு மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆர்.எம்.எஸ்., ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் ஆர்.எம்.எஸ்., ராமநாதன் செட்டியார் நகராட்சி தொடக்கப்பள்ளி ஆகிய 3 இடங்களிலும், திருப்புத்துார் சட்டசபை தொகுதிக்கு திருப்புத்துார் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியிலும், சிவகங்கை சட்டசபை தொகுதிக்கு மன்னர் துரைசிங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியிலும், மானாமதுரை சட்டசபை தொகுதிக்கு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி வகுப்புகள் நடந்தது.
இதில் 7,288 பல்வேறு நிலைகளில் பணிபுரியும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். 140 மண்டல அலுவலர்கள் பயிற்சி வழங்கினர். அவர்களை கண்காணிக்க ஒவ்வொரு பயிற்சி மையத்துக்கும் மாவட்ட நிலை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஓட்டுச்சாவடி மையங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அலுவலர்கள் ஓட்டளிப்பதற்கு ஏதுவாக அதற்குரிய படிவங்கள் பயிற்சி வகுப்பில் வழங்கவும், அப்படிவங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகத்திலும் மற்றும் அதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள இடங்களில் தங்களது அஞ்சல் வாக்குகளை அளிப்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டது. மன்னர் துரைசிங்கம் கல்லுாரியில் நடந்த பயிற்சி வகுப்பினை பார்வையிட்ட கலெக்டர் பொற்கொடி ஓட்டுச்சாவடியில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் பணிகள் குறித்து எடுத்துகூறினார். சிவகங்கை சட்டசபை தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெபி கிரேசியா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவராமன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
மேலும்
-
இன்று இனிதாக (29.03.2026) விருதுநகர்
-
தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
-
கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதியில் தொடரும் புதுமுக வேட்பாளர் 'பார்முலா'
-
டாப்ஸ், சிறப்பு டெட் திட்டங்களால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு செக் வைக்கும் தி.மு.க.,
-
கல்குவாரி, கிரஷர் லாரிகளால் 3 ஆண்டுகளில் 30 பேர் உயிரிழப்பு!
-
வேட்பாளர் பட்டியலுடன் கோவிலில் வழிபட்ட முதல்வர்