அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு நிர்வாகிகள் வரவேற்பு
கடலுார்: நெய்வேலி மற்றும் குறிஞ்சிப்பாடி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு அக்கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.
நெய்வேலி தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன், குறிஞ்சி்ப்பாடி தொகுதியில் கடலுார் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., மீனவரணி செயலாளர் புவனேந்திரன் போட்டியிடுகின்றனர். இருவருக்கும் கடலுார், பச்சையாங்குப்பம் இரட்டை ரோடு அருகில் அ.தி.மு.க., வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, இருவரும் குறிஞ்சிப்பாடியில் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணியன், எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் சுப்பிரமணியன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் கார்த்திகேயன், நகர செயலாளர் ஆனந்த பாஸ்கர், மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் பக்தரட்சகன், அண்ணா தொழிற்சங்க மாநில துணை செயலாளர் சூரியமூர்த்தி, அவைத்தலைவர் முத்துலிங்கம், தங்கப்பன், ராதாகிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிசாமி, ஒன்றிய செயலாளர் பாஷியம், மாவட்ட மாணவரணி செயலாளர் சஞ்சீவி, பா.ஜ., மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பா.ம.க., ஒன்றிய செயலாளர் சகாதேவன், மதி, அ.ம.மு.க., நகர செயலாளர் பிரவீன் சேது மற்றும் கூட்டணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மேலும்
-
இன்று இனிதாக (29.03.2026) விருதுநகர்
-
தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
-
கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதியில் தொடரும் புதுமுக வேட்பாளர் 'பார்முலா'
-
டாப்ஸ், சிறப்பு டெட் திட்டங்களால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு செக் வைக்கும் தி.மு.க.,
-
கல்குவாரி, கிரஷர் லாரிகளால் 3 ஆண்டுகளில் 30 பேர் உயிரிழப்பு!
-
வேட்பாளர் பட்டியலுடன் கோவிலில் வழிபட்ட முதல்வர்