ராம நவமி விழா
கடலுார்: கடலுார் அடுத்த கரையேறவிட்ட குப்பத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ராமநவமி விழா நடந்தது.
விழாவில் மாநில தர்ம பிரசார் இணை அமைப்பாளர் பார்த்திசாரதி பவுதிக் வழங்கினார். மாவட்ட பஜ்ரங்தள் அமைப்பாளர் ஆசைத்தம்பி, மாவட்ட தர்மாச்சாரிய சம்பர்க அமைப்பாளர் கார்த்திக்கானந்தா சரஸ்வதி, மாவட்ட செயலாளர் ஹரிதாசன் மற்றும் நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் விழாவில் பங்கேற்றனர். நிறைவாக, அகில பாரத சன்யாசிகள் சங்கத்தின் கடலுார் மாவட்ட தலைவர் மேகானந்த சரஸ்வதி தீபாராதனை காட்டினார். அனைவரும் வழிபாடு செய்தனர்.
பங்கேற்றவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement