நெசவாளர்களுக்கு பயிற்சி நிறைவு விழா 

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் குமரவேல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் நடுவீரப்பட்டு, சி.என்.பாளையத்தை சேர்ந்த கைத்தறி நெசவாளர்களுக்கு, 45 நாட்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடந்தன.

ஜவுளி அமைச்சகத்தின் நெசவாளர் சேவை மையத்தின் சார்பில், சமர்த்திறன் மேம்பாட்டு நெசவு சம்மந்தமான பயிற்சியில், நெசவாளர்களுக்கு கைத்தறி நெசவில் புதிய ரகங்களை வடிமைப்பது, உற்பத்தி செய்வது சம்மந்தமான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன. சிறப்பு பயிற்சியின் நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு சென்னை, நெசவாளர் சேவை மைய அலுவலர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாளர் மோகன் வரவேற்றார்.

கைத்தறி ஆய்வாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக டில்லி, சமர்த்திறன் மேம்பாட்டு அலுவலர் பிரபு கலந்து கொண்டு,பயிற்சியாளர்களிடம் கலந்துரையாடினார்.

நிகழ்ச்சியில் கைத்தறி நெசவாளர்கள்,கைத்தறி நெசவாளர் சங்க மேலாளர்கள்,ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement