தேர்தல் சின்னங்களே இல்லாத கிராமங்கள்

வடமதுரை:வடமதுரை ஒன்றியத்தில் பல கிராமங்களில் ஓட்டுச்சாவடிகள் ஊர் மத்தியில் இருப்பதால் தேர்தல் சின்னங்கள் வரையப்படாமல் சுவர் 'பளிச்' என உள்ளன.

தேர்தல் நடைமுறையில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்ட நிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சின்னம் வரைய, போஸ்டர் ஒட்ட அனுமதிக்கப்படுவதில்லை. கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றப்படுகின்றன.ஆனால் ஊரகப் பகுதிகளில் மட்டும் சின்னங்கள் வரைய அனுமதிக்கப்படுகிறது. இதிலும் ஓட்டுச்சாவடியில் இருந்து 200 மீட்டர் துாரம் வரை சின்னம் வரைய, போஸ்டர் ஒட்ட அனுமதியில்லை.

கிராமங்களில் பெரும்பாலும் தேர்தல் ஓட்டுச்சாவடியான பள்ளி கட்டடம் ஊர் மையத்தில் இருக்கும். இதனால் பல கிராமங்களில் சின்னம் வரைய முடியாத நிலை உள்ளது.இதுபோல் வடமதுரை ஒன்றிய கிராமங்களில் ஓட்டுச்சாவடிகள் ஊர் மத்தியில் உள்ளதால் தேர்தல் சின்னம் எதுவும் வரையப்படாமல் சுவர் 'பளிச்' என காணப்படுகின்றன.

Advertisement