வேலூரில் முதல்வர் ஸ்டாலின்; வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிப்பு

28

நமது நிருபர்




வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியில் வீடு வீடாக சென்று முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலினும் ஒவ்வொரு மாவட்டத்திற்காக சென்று பிரசாரம் செய்து வருகிறார்.

அந்த வகையில், வேலூருக்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், இன்று காலை கே.வி.குப்பம் பகுதியில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தார். அப்போது, திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார்.

பொதுமக்களிடமும், கல்லூரி கலந்துரையாடினார். அப்போது, சிலர் அவருடன் கைகுலுக்கி செல்பி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, சாலையோர டீக்கடையில் அமர்ந்து டீக்குடித்து ஓட்டு சேகரித்தார்.

Advertisement