அரசு கலைக் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
கோவை: கோவை அரசு கலைக்கல்லுாரியில் 35 வது பட்டமளிப்பு விழா நடந்தது.
டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர் பிரேம்குமார் பட்டங்களை வழங்கி பேசுகையில், ''வாய்ப்புகள் நிறைந்த உலகில், கவனத்தை சிதறடிக்கும் விஷயங்களும் ஏராளம் உள்ளன. நேரத்தை திறம்பட நிர்வகிப்பவர்களே வெற்றி அடைகிறார்கள். சரியான முடிவுகளை எடுக்கும் அறிவு, சவால்களை எதிர்கொள்ளும் மனவலிமை மற்றும் கனவுகளை அடையும் உற்சாகம் இருந்தால் வாழ்க்கையில் முன்னேற்றமே,'' என்றார்.
இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளைச் சேர்ந்த ஆயிரத்து 637 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
முதல்வர் எழிலி தலைமை வகித்தார். பாரதியார் பல்கலை செனட் உறுப்பினர் பாலமுருகன், கல்லுாரி தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் செல்வராஜ், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குவியும் தேர்தல் விதிமீறல் :வழக்குகள் கண்டுகொள்ளாத அரசியல் கட்சிகள் அலட்சியம்
-
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.81.04 லட்சம் வர்த்தகம்
-
மயிலம் தொகுதி அ.தி.மு.க., சண்முகம் மனு தாக்கல்
-
தேர்தலையொட்டி மதுபான பார்களை மூட உத்தரவு
-
சங்கராபுரத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் ராகேஷ் மனு
-
குவாரி குட்டை நீரில் மூழ்கி பெண் பலி
Advertisement
Advertisement