சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற திருத்தணி மாணவனுக்கு பாராட்டு விழா
திருத்தணி: தேசிய அளவில் நடந்த சிவில் சர்வீசஸ் தேர்வில், திருத்தணியைச் சேர்ந்த மவுலீஸ்வரன், 410வது இடத்தை பிடித்து வெற்றி பெற்றதை தொடர்ந்து, நேற்று சுதந்திரா பள்ளி சார்பில் பாராட்டு விழா நடந்தது.
திருத்தணி காந்திரோடு பகுதியைச் சேர்ந்த மாணவர் மவுலீஸ்வரன், கடந்தாண்டு நடந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் பங்கேற்று, 410வது இடத்தை பிடித்து வெற்றி பெற்றார். இந்நிலையில், மவுலீஸ்வரன் படித்த திருத்தணி சுதந்திரா மேல்நிலைப் பள்ளியில் நேற்று பாராட்டு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் சியமளா ரங்கநாதன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் துரைகுப்பன் வரவேற்றார். இதில், சுதந்திரா பள்ளி தலைவர் பேராசியர் ரங்கநாதன், தளபதி மகளிர் கல்லுாரி முதல்வர் வேதநாயகி ஆகியோர் பங்கேற்று, சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற முன்னாள் மாணவன் மவுலீஸ்வரனை பாராட்டி பரிசுகள் வழங்கினர்.
மவுலீஸ்வரன் பேசுகையில், 'தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால், அனைத்து மாணவர்களும் சாதிக்கலாம்' என்றார். தொடர்ந்து. மாணவன் மவுலீஸ்வரன், பள்ளியின் 50வது ஆண்டு பொன்விழா மலரை வெளியிட, திருத்தணி அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் ஹேமநாதன் பெற்றுக் கொண்டார்.
மேலும்
-
ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில் வரும் 13ல் சித்திரை திருவிழா துவக்கம்
-
காயலான் கடைக்காரரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்
-
ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் சிக்னல்கள் :அ.தி.மு.க., வேட்பாளர் கந்தன் உறுதி
-
அரக்கோணம் தடத்தில் ரயில் சேவையில் மாற்றம்
-
கட்சி கொடி வைப்பதில் பாரபட்சம்: வி.சி., கட்சியினர் திடீர் போராட்டம்
-
வீடு புகுந்து திருட முயன்றவரை நையப்புடைத்து போலீசில் ஒப்படைப்பு