ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில் வரும் 13ல் சித்திரை திருவிழா துவக்கம்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா நாளை மறுநாள் முதல் துவங்க உள்ளது.

ஸ்ரீபெரும்புதுாரில் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் உள்ளது. இக் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் ராமானுஜர் அவதார உத்சவம் மற்றும் பிரம்மோத்சவ திருவிழா கோலாகலமாக நடைபெறும்.

முதல் பத்து நாட்கள் ராமானுஜர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதேபோல, அடுத்த பத்து நாட்கள் ஆதிகேசவப் பெருமாள் உத்சவம் நடக்கும்.

கோலாகலமாக நடைபெறும் இந்த திருவிழாவில், தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, வடம் பிடித்து தேர் இழுத்து கொண்டாடுவார்கள்.

இந்த ஆண்டு, சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா நாளை மறுநாள் துவங்க உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா ஏப்., 21ம் தேதி நடைபெற உள்ளது.

அதேபோல, அதிகேசவப் பெருமாள் உத்சவம் மே 1ல் துவங்கி, மே 10ம் தேதி வரை நடைபெறும்.

Advertisement