வீடு புகுந்து திருட முயன்றவரை   நையப்புடைத்து போலீசில் ஒப்படைப்பு

திருவாலங்காடு: மணவூரில் வீடு புகுந்து திருட முயன்றவரை, அப்பகுதி மக்கள் நையப்புடைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் ஊராட்சிக்கு உட்பட்டது காபுலகண்டிகை கிராமம். இங்கு, சங்கு மூர்த்தி நகரில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில், ஒரு மாதமாக 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இரவில் சுற்றித் திரிந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு 12:00 மணியளவில், அந்நபர் சங்குமூர்த்தி நகர் பிரதான சாலையில் உள்ள வீட்டில் திருட முயற்சித்துள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், அவரை கையும் களவுமாக பிடித்தனர். தப்பிக்க முயன்ற திருடனை நையப்புடைத்து திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், திருவள்ளூர் அடுத்த புட்லூரைச் சேர்ந்த கோவிந்தராஜன், 47, என தெரியவந்தது. அவனை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement