குண்டாசில் வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் பேகம்பூர் பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் 26, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வீடு புகுந்து பணம் பறித்த வழக்கில் வடக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவரது குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., பிரதீப் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சரவணன் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் ரமேஷ்குமாரை குண்டாசில் சிறையில் அடைத்தனர்.

Advertisement