கி.கிரியில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 6 சட்டசபை தொகுதிகளில் ஓட்டுப்பதிவு குறித்த முதற்கட்ட பயிற்சியில் பங்கேற்காத, 909 ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., அலுவலகம், பர்கூர் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் படிவங்கள் மற்றும் பாதுகாப்பு பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான தினேஷ்குமார் ஆய்வு செய்தார். தொடர்ந்து, கிருஷ்ணகிரி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதற்கட்ட பயிற்சியில் பங்கேற்காத ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு நடந்த பயிற்சி வகுப்பை ஆய்வு செய்த பின் நிருபர்களிடம் கூறியதாவது:
மாவட்டத்தில் தேர்தல் பணியில், 10,040 அலுவலர்கள் ஈடுபடுகின்றனர். ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள், ஓட்டுச்சாவடி நிலை --1, நிலை --2, நிலை --3 அலுவலர்களுக்கு முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள, கணினி மூலம் சுழற்சிமுறையில் தேர்வு செய்யப்பட்டு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதற்கட்ட பயிற்சியில் கலந்து கொள்ளாத, 909 அலுவலர்களுக்கு, அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம், பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில், மாதிரி ஓட்டுச்சாவடி மையம் அமைத்து, செயல்முறை விளக்கம் மற்றும் அலுவலர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது. தேர்தல் நாளில் பயன்படுத்தப்படும் படிவங்களை நிரப்புவது குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டது.
இவ்வாறு, அவர் கூறினார்.
தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கிருஷ்ணகிரி ஷாஜகான், பர்கூர் அபிநயா, தாசில்தார் சின்னசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும்
-
சங்கராபுரத்தில் தி.மு.க.,அ.தி.மு.க. வேட்பாளர்கள் மனு தாக்கல்
-
சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 33 ஆண்டு சிறை
-
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் உளுந்துார்பேட்டையில் பிரசாரம் ;மாவட்ட செயலாளர் அழைப்பு
-
திண்டிவனம் போலீஸ் ஸ்டேஷனில் வீணாகி வரும் வாகனங்கள்
-
தி.மு.க., வேட்பாளர் தீவிர ஓட்டு சேகரிப்பு
-
வருவாய்த் துறையினருக்கு 'மீல்ஸ்'; போலீசாருக்கு பட்ட சாதம்