ஹீலியம் பலுானை பறக்கவிட்டு ஓட்டளிக்க விழிப்புணர்வு



கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, 6 சட்டசபை தொகுதிகளிலும் வரும், 23-ல் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில், 100 சதவீதம் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

அதன்படி, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான தினேஷ்குமார், ஹீலியம் பலுானை பறக்க விட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து, விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து, கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை பார்வையிட்டார்.

Advertisement