பால தண்டாயுத சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்

புவனகிரி: பால தண்டாயுதசுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புவனகிரி முத்தாட்சிப் பிள்ளையார் கோவில் தெருவில் பால தண்டாயுதசுவாமி கோவில் உள்ளது. இங்கு பங்குனி உத்திரத்தையொட்டி, கடந்த 1ம் தேதி காலை 7:00 மணிக்கு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து வெள்ளாற்றங்கரையில் இருந்து, கரகம், காவடியுடன் பக்தர்கள் புறப்பட்டு ஊர்வலமாக கோவில் வந்தடைந்தனர். கடந்த, 2ம் தேதி இரவு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடந்தது.

பக்தர்கள் பெருமளவில் பங்கேற்று வழிபாடு நடத்தினர். நேற்று முன்தினம் மாலை இடும்பன் பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.

Advertisement