ஈஸ்டர் திருநாள் சிறப்பு திருப்பலி: மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு
சிவகங்கை:சிவகங்கை அலங்கார அன்னை மற்றும் வல்லனி அன்னை தெரசா சர்ச்சில் ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி, சிறப்பு திருப்பலி நடத்தினர்.
இயேசு உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் திருநாளாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு சிவகங்கை அலங்கார அன்னை சர்ச்சில் சிவகங்கை மறைமாவட்ட பிஷப் லுார்து ஆனந்தம் தலைமையில் கிறிஸ்தவர்கள் கையில் மெழுகுவர்த்தியை ஏந்தி, சிறப்பு திருப்பலி நடத்தினர். வட்டார அதிபர் ஜெபமாலை சுரேஷ், உதவி பாதிரியார் ஸ்டீபன் உட்பட அலங்கார அன்னை சர்ச் பங்கை சேர்ந்த அனைத்து கிறிஸ்தவர்களும் ஈஸ்டர் திருநாள் சிறப்பு திருப்பலியில் பங்கேற்னர். சிவகங்கை அருகே வல்லனி அன்னை தெரசா சர்ச்சில் பாதிரியார் பிலிப் தலைமையில் பாதிரியார்கள் சிறப்பு திருப்பலி நடத்தினர். இந்த சர்ச் பங்கை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் திருநாளில் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு திருப்பலியில்பங்கேற்றனர்.
///
மேலும்
-
.கிரி காங்., வேட்பாளரை எதிர்த்து நிர்வாகி வேட்புமனு
-
குஜராத் மக்களுக்கு எதிரான பேச்சு: கார்கேவுக்கு பா.ஜ., கண்டனம்
-
தி.மு.க., - மா.செ.,வை எதிர்த்து வி.சி.க.,வினர் கண்டன கோஷம்
-
. மீண்டும் வெற்றி பெற்று மீதமுள்ள பணிகளை செய்வேன்: அமைச்சர் வேலு
-
மனு தாக்கலில் சதம் அடித்த கரூர் தொகுதி மாவட்டத்தில் 211 வேட்பாளர்கள் மனுதாக்கல்
-
'அனைத்து திட்டங்களையும் நானே செய்தேன்' அமைச்சர் பேச்சால் கட்சியினர் அதிருப்தி