மனு தாக்கலில் சதம் அடித்த கரூர் தொகுதி மாவட்டத்தில் 211 வேட்பாளர்கள் மனுதாக்கல்
கரூர், கரூர் தொகுதியில், 100 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், மாவட்டத்தில், 211 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் வரும், 23ல் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய, கரூர் ஆர்.டி.ஓ., அலுவலகம், அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம், கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகம், குளித்தலை சப்-கலெக்டர் அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது.
இதில் கரூர் தொகுதியில், அ.தி.மு.க.,வில் விஜயபாஸ்கர், தி.மு.க.,வில் ஆசி.தியாகராஜன், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தம்பி அசோக்குமார், தி.மு.க., மாற்று வேட்பாளராகவும், த.வெ.க.,வில் மதியழகன், நா.த.க.,வில் கருப்பையா உள்பட, 100 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இங்கு, சுயேட்சைகள் அதிக எண்ணிக்கையில் தாக்கல் செய்ததால், வேட்பு மனு தாக்கலில் சதம் அடித்துள்ளது.
அரவக்குறிச்சியில், தி.மு.க.,வில் இளங்கோ, அ.தி.மு.க.,வில் செல்வகுமார், த.வெ.க.,வில் கார்த்திகேயன், நா.த.க. நரேன் உள்பட, 42 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். கிருஷ்ணராயபுரம் தொகுதியில், அ.தி.மு.க.,வில் டாக்டர் திவ்யா, தி.மு.க.,வில் ராஜா, த.வெ.க., எம்.சத்யா, நா.த.க. வி.சத்யா உள்பட 32 பேர் தாக்கல் செய்துள்ளனர். குளித்தலையில் அ.தி.மு.க., கருணாகரன், தி.மு.க.,வில் சந்திரன், த.வெ.க., பாலசுப்பிரமணியன், நா.த.க. நன்மாறன் உள்பட, 37 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இதன்படி கரூர் மாவட்டத்தில், 4 தொகுதிகளில், 211 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
மேலும்
-
பெரிய நாயகி அம்மன் கோயிலில்ஏப்., 20 ல் கும்பாபிேஷகம்
-
சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை: எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் மேல்முறையீடு
-
மகன் இறப்பில் சந்தேகம்: தாய் எஸ்.பி.,யிடம் புகார்
-
எஸ் கரிசல்குளம் கோயிலில் பங்குனி பொங்கல் விழா
-
அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து
-
முதியோர் பென்ஷன் பெறுவோரிடம் வாழ்வுரிமை சான்றுக்கு வசூல் : சிவகங்கையில் சங்கங்கள் மீது புகார்