கோடை வெயில் அதிகரிப்பால் அலைமோதும் வனவிலங்குகள்
வால்பாறை: கோடை வெயிலால், வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் சுற்றுலா பயணியர் கவனமாக செல்ல வேண்டும், என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரண்டு வனச்சரகங்களிலும், வன விலங்குகள் அதிக அளவில் உள்ளன. வால்பாறையில் கடந்த ஆண்டு போதிய அளவு மழை பெய்ததால், வனவளம் பசுமையாக காணப்பட்டது.
தற்போது, கோடை வெயிலால், வன விலங்குகள் உணவு மற்றும் குடிநீருக்காக பகல் நேரத்தில் இடம் பெயரத்துவங்கியுள்ளன. வனவிலங்குககளின் தாகம் தீர்க்க வனத்துறை சார்பில், 10 இடங்களில் குடிநீர் தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறையில், தற்போது கோடை வெயில் நிலவுவதால் வனவிலங்குகள் அதிக அளவில் வெளியே வரத்துவங்கியுள்ளன. குறிப்பாக, ஆழியாறு முதல் வால்பாறை வரையிலான ரோட்டிலும், வால்பாறையில் இருந்து சின்கோனா வழியாக சின்னக்கல்லார் எஸ்டேட் வரை செல்லும் ரோட்டிலும், வன விலங்குகள் பகல் நேரத்திலேயே நடமாடுகின்றன.
குடிநீர் மற்றும் உணவு தேடி வனவிலங்குகள் பகல் நேரத்தில் ரோட்டை கடப்பதால், சுற்றுலா பயணியர் தங்களது வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும். மேலும், சுற்றுலா பயணியர் வனத்திற்குள் அத்துமீறி நுழைவதை தவிர்க்க வேண்டும். மீறினால் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, கூறினர்.
மேலும்
-
சங்கராபுரத்தில் தி.மு.க.,அ.தி.மு.க. வேட்பாளர்கள் மனு தாக்கல்
-
சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 33 ஆண்டு சிறை
-
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் உளுந்துார்பேட்டையில் பிரசாரம் ;மாவட்ட செயலாளர் அழைப்பு
-
திண்டிவனம் போலீஸ் ஸ்டேஷனில் வீணாகி வரும் வாகனங்கள்
-
தி.மு.க., வேட்பாளர் தீவிர ஓட்டு சேகரிப்பு
-
வருவாய்த் துறையினருக்கு 'மீல்ஸ்'; போலீசாருக்கு பட்ட சாதம்