வெற்றியோடு வர முதல்வர் கூறினார்; -கே.கே.செல்வகுமார்
நத்தம்:''வெற்றியோடு வர முதல்வர் கூறியதாக,'' நத்தம் தொகுதி தி.மு.க., கூட்டணி தமிழர் தேசம் வேட்பாளர் கே.கே.செல்வகுமார் பிரசாரம் செய்தார் .
நத்தம் முளையூர் நல்லரவான் கோயிலில் வழிபாடு செய்து பிரசாரத்தை துவக்கிய செல்வகுமார் சின்ன முளையூர், மலையூர் உள்ளிட்ட 50க்கு மேற்பட்ட கிராமங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது; முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழர் தேசத்துக்கு நத்தம் தொகுதியை ஒதுக்கீடு செய்து வெற்றியோடு வாருங்கள் என என்னை அனுப்பி வைத்துள்ளார். அவரதுநம்பிக்கையை நீங்கள் காப்பாற்ற வேண்டும். என்னை தேர்வு செய்தால் வரக்கூடிய தொகுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் கொண்டு வந்து மாநிலத்திலேயே சிறந்த தொகுதி என்ற பெயரை பெற்று தருவேன். நீங்கள் என்னை தேடி அலைய தேவையில்லை. நான் மாதம் ஒருமுறை ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் வந்து உங்கள் தேவையை கேட்டு பூர்த்தி செய்வேன். இப்பகுதியில் நுாற்றுக்கும மேற்பட்ட போராட்டங்களை நடத்தி பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றி தந்துள்ளேன் என்றார்.
தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம், பொருளாளர் விஜயன், பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர்பாட்ஷா, ஒன்றிய செயலாளர் ரத்தினகுமார்,பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமாரசாமி, த. வே.மு.க., நிறுவனர் எஸ்.எஸ். சரவணசெல்வம், வன வேங்கை தலைவர் இரணியன்,தமிழர் தேசம் ஒருங்கிணைப்பாளர் குருமணிகண்டன், செயலாளர்பூமி அம்பலம், செயலாளர்பிரபு அம்பலம், அமைப்புசெயலாளர் மகுடேஸ்வரன் கலந்து கொண்டனர்.
மேலும்
-
ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில் வரும் 13ல் சித்திரை திருவிழா துவக்கம்
-
காயலான் கடைக்காரரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்
-
ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் சிக்னல்கள் :அ.தி.மு.க., வேட்பாளர் கந்தன் உறுதி
-
அரக்கோணம் தடத்தில் ரயில் சேவையில் மாற்றம்
-
கட்சி கொடி வைப்பதில் பாரபட்சம்: வி.சி., கட்சியினர் திடீர் போராட்டம்
-
வீடு புகுந்து திருட முயன்றவரை நையப்புடைத்து போலீசில் ஒப்படைப்பு