வாக்காளர் விழிப்புணர்வு முகாம்

குஜிலியம்பாறை:ஆலம்பாடி பண்டிதகாரனுார் ஓட்டுச்சாவடி எண் 11ல் கடந்த சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் மிகக் குறைவான வாக்குகளே பதிவாகி இருந்தன. இதை கருத்தில் கொண்டு இப்பகுதி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

இதில் அதிகாரிகளுடன் சேர்ந்து பொதுமக்கள் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வரும் சட்டசபை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

குஜிலியம்பாறை தாசில்தார் நந்தகோபால், வட்ட வழங்கல் அலுவலர் மேனகா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement