ஈரான் ராணுவ தளபதிகள் பலி :அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட ஒரு பிரமாண்ட தாக்குதலில் ஈரானின் உயர்மட்ட ராணுவ தளபதிகள் ஒழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

போரை நிறுத்துவதற்கு மேற்காசிய நாடான ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அளித்துள்ள காலக்கெடு, இன்றுடன் முடிகிறது.

இந்நிலையில், டிரம்ப் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது நடத்தப்பட்ட ஒரு பிரமாண்ட தாக்குதலில் அந்நாட்டின் உயர்மட்ட ராணுவ தளபதிகள் பலர் கொல்லப்பட்டனர். ஈரானை மோசமாகவும், அறிவீனமாகவும் வழி நடத்திய ராணுவ தலைவர்கள் இந்த நடவடிக்கையின் வாயிலாக ஒழிக்கப்பட்டுவிட்டனர்.

இத்தாக்குதல் ஈரானிய ராணுவ கட்டமைப்பின் முதுகெலும்பை உடைத்துள்ளதுடன், ஈரானின் ராணுவ தலைமையை துடைத்தெறிந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement