டாப் காங்., வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் புதுச்சேரியில் பிரசாரம் :நகர பகுதியில் போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு
புதுச்சேரி: காங்., வேட்பாளர்களை ஆதரித்து லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் புதுச்சேரியில் காலை 10:00 மணியளவில் இ.சி.ஆர்., புதிய பஸ்நிலைய மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இதற்கான ராகுல் டில்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை விமானம் நிலையம் வருகிறார். அங்கிருந்து மினி விமானத்தில் புதுச்சேரி வருகிறார்.
கூட்டத்தில் தெலுங்கானா போக்குவரத்து அமைச்சர் பொன்னம்பிரபாகர், கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ்குண்டுராவ், காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூட்டணி கட்சி வேட்பாளர்கள், தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
ராகுல் வருகையால் இ.சி.ஆர் விழாக்கோலம் பூண்டுள்ளது. அவரை வரவேற்க காங்., கட்சியினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
கட்டுப்பாடுகள்:
வி.வி.ஐ.பி., பயணிக்க திட்டமிடப்பட்டுள்ள இ.சி.ஆர் சாலைகளில் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படாது. இன்று லாஸ்பேட்டை விமான நிலைய சாலை முதல் லதா ஸ்டீல் ஹவுஸ் சந்திப்பு வரை மற்றும் சிவாஜி சிலை சந்திப்பு முதல் ராஜிவ் காந்தி சதுக்கம் வரை அனைத்து கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் பஸ்கள் உட்பட செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வழித்தட மாற்றம்:
இ.சி.ஆரில் கோட்டக்குப்பம் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் சிவாஜி சதுக்கம், கோட்டக்குப்பம் தமிழக பகுதியில் இருந்து முத்தியால்பேட்டை அஜந்தா சந்திப்பு வழியாகத் திருப்பி விடப்படும்.
கோட்டக்குப்பத்திலிருந்து சிவாஜி சதுக்கம் நோக்கி வரும் வாகனங்கள் முத்தியால்பேட்டை, மகாத்மா காந்தி சாலை - ஏழை மாரியம்மன் கோவில் சந்திப்பு - அஜந்தா சந்திப்பு வழியாகத் திருப்பி விடப்படும்.
இ.சி.ஆர் வழியாக புதுச்சேரி நோக்கி வரும் அனைத்து கனரக வாகனங்களும் காலாப்பட்டு எல்லையில் மாத்துார் சாலை வழியாகத் திருப்பி விடப்படும். திண்டிவனம் பைபாசில் இருந்து கோரிமேடு நோக்கி வரும் கனரக வாகனங்கள் ஜிப்மர் சந்திப்பில் மேட்டுப்பாளையம் சாலை வழியாகத் திருப்பி விடப்படும்.
ராஜிவ் சதுக்கத்திலிருந்து இ.சி.ஆர்., வழியாக லதா ஸ்டீல் ஹவுஸ், சிவாஜி சதுக்கம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் காமராஜர் சாலை சரம் சந்திப்பு நோக்கித் திருப்பி விடப்படும்.
கடலுாரிலிருந்து இ.சி.ஆர்., வழியாகச் சென்னை செல்லும் வாகனங்கள் தவளக்குப்பம் மற்றும் மரப்பாலம் சந்திப்புகளில் திருப்பி விடப்படும்.
பொது கூட்டத்திற்கு வரும் பஸ்கள்;
மடுவுப்பேட்டை சந்திப்பு;
இங்கு தொண்டர்களை இறக்கிவிட்டு, இ.சி.ஆர்., வழியாகச் சென்று பாத்திமா பள்ளி மைதானத்தில் நிறுத்தப்பட வேண்டும்.
லதா ஸ்டீல் ஹவுஸ் சந்திப்பு:
இங்கு தொண்டர்களை இறக்கிவிட்டு, பஸ்கள் பாத்திமா பள்ளி மைதானத்திற்குச் சென்று நிறுத்தப்பட வேண்டும். வி.வி.ஐ.பி., பாதையில் பஸ்களை நிறுத்தவோ அல்லது பார்க்கிங் செய்யவோ அனுமதி இல்லை. பயணிகளை இறக்கிவிட்டவுடன் பஸ்கள் உடனடியாக ஒதுக்கப்பட்ட இடத்திற்கு செல்ல வேண்டும். பாத்திமா பள்ளி மைதானத்தில் பஸ், கார், வேன்கள் நிறுத்த அனுமதிக்கப்படும். புதிய மீன் சந்தை வளாகத்தில் பைக் நிறுத்த அனுமதிக்கப்படும்.
இந்த போக்குவரத்து மாற்றம் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்றைய வருகைக்கும் பொருந்தும் என, போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
மேலும்
-
பைக் விபத்தில் வாலிபர் பலி
-
வேதகிரீஸ்வரர் உண்டியலில் ரூ.10.92 லட்சம் வசூல்
-
ஓட்டு சதவீதம் அதிகரிக்கும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம்
-
செங்கையில் 7 தொகுதிகளில் 113 பேர் போட்டி
-
கிராம கடைகளில் மதுபானம் விற்பனை எம்.எல்.ஏ., புகார்
-
சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டு சிறை மாண்டியா நீதிமன்றம் தீர்ப்பு