ஊசுடு தொகுதி காங்., வேட்பாளர் கார்த்திகேயன் ஓட்டு சேகரிப்பு
வில்லியனுார்: ஊசுடு தொகுதியில் காங்., வேட்பாளர் கார்த்திகேயன் கை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
இண்டி கூட்டணியில் ஊசுடு தொகுதி காங்., வேட்பாளராக கார்த்திகேயன், நேற்று காலை கூடப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள புதிய நகர்களில் வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அப்போது அப்பகுதியில் அவருக்கு மலர் துாவி ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
அப்போது அவர், கூடப்பாக்கம் கிராமத்திற்கு தேவையான சாலைகள், சுகாதாரமான குடிநீர், மின் விளக்கு என அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதாகவும், கிராமத்தில் படித்த இளைஞர்களுக்கு தனியார் நிறுவனத்தில் நிரந்தர வேலை பெற்று தறுவதாகவும், அரசு வேலை கிடைப்பதற்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் தனது சொந்த செலவில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்வேன் என வாக்குறுதிகளை வழங்கி கை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
இண்டி கூட்டணி கட்சிகள் தி.மு.க., லோகையன், காங்., சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும்
-
வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதி! அடுப்புக்கரி, விறகுக்கு விலை அதிகரிப்பு
-
விளாம்பட்டியில் கட்சிக்கொடி, போஸ்டர், கொடிக்கம்பங்கள், தலைவர்கள் சிலை இல்லை: 60 ஆண்டுகளாக கடைபிடிக்கும் அதிசய கிராமம்
-
தேர்தல் செலவுக்கு பணம் இல்லாமல் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் திணறல் !
-
தினமலர் செய்தி எதிரொலி :பஸ்களில் ஏர்ஹாரன்கள் அகற்றம்
-
விஜய் கூட்டத்திற்கு அனுமதி மறுப்பதாக திமுக மீது திசை திருப்புகின்றனர்; திருமா குற்றச்சாட்டு
-
சேத்துாரில் ஒற்றை யானையால் ஏராளமான தென்னை மரங்கள் சேதம்:-இரவு காவல் பணிக்கும் விவசாயிகள் அச்சம்