சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டு சிறை மாண்டியா நீதிமன்றம் தீர்ப்பு
மாண்டியா: சிறுமி பலாத்கார வழக்கில், வாலிபருக்கு, 20 ஆண்டு சிறை, ஏழு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மாண்டியா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மாண்டியா நகரின் தாவரகெரே லே - அவுட்டில் வசிப்பவர் அகீப் ஆலம், 28. இவர் அதே பகுதியில் வசிக்கும், 16 வயது சிறுமியை காதலிப்பதாக நாடகமாடினார்.
சிறுமி பள்ளிக்கு செல்லும் போதும், வீட்டுக்கு வரும் போதும் பின் தொடர்ந்து தொல்லை கொடுத்தார்.
தன்னை காதலிக்க மறுத்தால், கையை அறுத்து தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டினார். 2023 ஜனவரி 27ம் தேதியன்று, இதே போன்று சிறுமியை பலவந்தமாக காரில் அழைத்து சென்றார்.
ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவின் கரிகட்டா மலையில் உள்ள கோவில் பின் பகுதியில் காரை நிறுத்தி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதை பெற்றோரிடம் கூறினால், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்.
இதனால், சிறுமி யாரிடமும் கூறவில்லை. பலாத்காரத்துக்கு ஆளானதால் கர்ப்பமடைந்தார். மனம் வருந்திய அவர், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மருத்துவ பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதன்பின் பெற்றோர், மாண்டியா நகர மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் விசாரணை நடத்தி, அகீப் ஆலமை கைது செய்தனர். விசாரணையை முடித்து, மாண்டியா மாவட்ட 2வது விரைவு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
விசாரணையில் அகீப் ஆலமின் குற்றம் உறுதியானதால், அவருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனையும், ஏழு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி திலீப் குமார் நேற்று தீர்ப்பளித்தார்.
மேலும்
-
துணை தேர்தல் கமிஷனர் ஆய்வு
-
பால பட்டாபிராமர் கோவிலில் கும்பாபிஷேகம்
-
நேரு கல்லுாரியில் 3,300 மாணவர்களுக்கு பணி ஆணை
-
'காசாகிராண்ட்' சி.பி.எல். சீசன்-1 திருவிழா: 162 ரன் குவித்த குபேரா தண்டர்ஹாக்ஸ்
-
சுயே. வேட்பாளர்களுக்கு சின்னம் ;தர்பூசணி, இஞ்சி, வெண்டைக்காய்
-
மாற்று திறனாளிகள், முதியவர்கள் ஓட்டு போட செல்வதற்கு இலவச பஸ்