தி.மு.க., மனு தாக்கல் செய்தபோது உள்ளே புகுந்த அ.தி.மு.க., சீனிவாசன்

1

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தி.மு.க.,வேட்பாளர் செந்தில் குமார் வேட்பு மனு செய்யும் போது அ.தி.மு.க., வேட்பாளர் சீனிவாசன் கட்சியினருடன் உள்ளே வந்தார். தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவிக்காததால் பெரும் பிரச்னை தவிர்க்கப்பட்டது.

திண்டுக்கல் தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் மதியம் 12:35 மணிக்கு தேர்தல் அலுவலர் பழனிவேலுவிடம் மனு தாக்கல் செய்தார். அவர் உறுதி மொழி வாசிக்கும் முன் அ.தி.மு.க., வேட்பாளர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகளை போலீசார் உள்ளே அனுமதித்தனர்.

தேர்தல் அலுவலரிடம், ‛நல்ல நேரம் முடிவதற்குள் மனுவை வாங்கிக் கொள்ளுங்கள் என சீனிவாசன் கூற, அலுவலரோ தி.மு.க., வேட்பாளர் விபரங்களை முடித்துக் கொள்கிறேன் என்றார். செந்தில்குமாரும் நான் உறுதி மொழி வாசித்துக் கொள்கிறேன் என்றார்.

அப்போது சீனிவாசன், 'அதெல்லாம் ஒன்றும் இல்லை தம்பி நல்லநேரம் முடிவதற்கு மனுவை கொடுத்துக் கொள்கிறேன் எனக்கூறினார். செந்தில்குமார் உறுதி மொழி வாசித்தபின் மனுவை கொடுங்கள் என சீனிவாசனிடம் தேர்தல் அலுவலர் கேட்டார். ‛நல்ல நேரம் வரட்டும் எனக்கூறி சீனிவாசன் சில நிமிடங்கள் காத்திருந்தார். இதில் ‛அப்செட்' ஆன தேர்தல் அலுவலர் தலையில் கைவைத்த படி நொந்து கொண்டார்.

சீனிவாசன் சில நிமிடங்கள் காத்திருந்து மனுதாக்கல் செய்தார். செந்தில்குமார் ‛அப்செட்' ஆகி கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தார்.

இத்தனை களேபரங்களும் மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் டாக்டர் சதீஷா முன்னிலையில் நடந்தேறியது. ஒருவர் வேட்பு மனு செய்யும் போது மற்றொரு வேட்பாளர் உள்ளே வரக்கூடாது என அவரோ ,தேர்தல் அலுவலர்களோ, போலீஸ் அதிகாரிகளோ சுட்டிக்காட்டாதது இரு கட்சியினரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

தொகுதி தேர்தல் அலுவலர் பழனிவேலு கூறியதாவது: தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் மனுதாக்கல் செய்யும் போது நடத்தை விதிகளை மீறி அ.தி.மு.க., வேட்பாளர் இதர நிர்வாகிகளை உள்ளே அனுமதித்தது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளேன் என்றார்.

இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

@block_B@ எஸ்.ஐ.,யை மிரட்டிய சீனிவாசன் சீனிவாசனுடன் வந்த பா.ம.க., மாவட்ட செயலாளர் ஜான் கென்னடியிடம் கூடுதலாக ஆட்கள் அனுமதி இல்லை. வீடியோ பதிவில் தெரிந்தால் என் வேலை காலியாகிவிடும் என டி.எஸ்.பி., கார்த்திக் கூறினார். ஏற்க மறுத்த ஜான்கென்னடி டி.எஸ்.பி.,யிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சீனிவாசனுடன் வந்த வழக்கறிஞரிடமும் விதிமீறல் என கூறி வெளியேறுமாறு டி.எஸ்.பி., கூறினார். ஆனால் ஜான்கென்னடி , வழக்கறிஞரை அலுவலகத்துக்குள் சீனிவாசன் அழைத்து வந்தார். டி.எஸ்.பி.,யோ செய்வதறியாது தவித்தார். அலுவலக நாற்காலியில் அமர போன சீனிவாசனிடம் எஸ்.ஐ., ஒருவர் வெளியேறுமாறு கூறினார். அவரிடம், 'இதோட போயிடுமா.. நீங்களும் இருப்பீங்க.. நாங்கள் இருப்போம் என கூற எஸ்.ஐ., நொந்துபோய் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.block_B

Advertisement