உசிலம்பட்டி தொகுதியில் 22 பேர் மனு தாக்கல்

உசிலம்பட்டி:உசிலம்பட்டி தொகுதியில் ஏற்கனவே 8 பேர் மனுதாக்கல் செய்த நிலையில் நேற்று 14 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 3 சுயே., வேட்பாளர்கள் டெபாசிட் பணம் கட்டவில்லை

உசிலம்பட்டியில் நேற்று காங்., வேட்பாளர் சரவணகுமார் தி.மு.க., கூட்டணி கட்சியினர்களுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக பிரவீணா மனு தாக்கல் செய்தார். நா.த.க., வேட்பாளர் அபிராமி, மாற்று வேட்பாளராக ருத்ரா மனுதாக்கல் செய்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., அய்யப்பன் சசிகலாவின் அனைத்திந்திய பு.த.ம.மு.கழகம் சார்பிலும், மாற்று வேட்பாளராக அசோக் மனு தாக்கல் செய்தனர். புதிய தமிழகம் சார்பில் முனியம்மாள் வேட்பாளராகவும், பேச்சியம்மாள் மாற்று வேட்பாளராகவும் மனு தாக்கல் செய்தனர். சுயேச்சை வேட்பாளர்களாக இந்திய திராவிட மக்கள் கட்சி அய்யாத்துரை, திருமூர்த்தி, முத்து, சீத்தா, தமிழ்செல்வன், குமார் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இதில் சுயே., வேட்பாளர்கள் சீத்தா, தமிழ்செல்வன், குமார் ஆகிய மூவரும் டெபாசிட் பணம் கட்டாமல் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Advertisement