என்னுடன் நடை போட்டிக்கு தயாரா? இபிஎஸ்க்கு துரைமுருகன் சவால்
காட்பாடி: “என் வயது முதிர்வு குறித்து விமர்சித்த அ.தி.மு.க., பொதுச்செயலர் இபிஎஸ், என்னுடன் நடை போட்டிக்கு வர தயாரா?” என அமைச்சர் துரைமுருகன் சவால் விடுத்துள்ளார்.
வேலுார் மாவட்டம், காட்பாடி தொகுதியில், தி.மு.க., சார்பில் அமைச்சர் துரைமுருகன் 11வது முறையாக போட்டியிடுகிறார். அவர், தன் மகன் கதிர் ஆனந்த் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பின், துரைமுருகன் அளித்த பேட்டி:
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க., பொதுச்செயலர் இபிஎஸ், 'அமைச்சர் துரைமுருகனுக்கு வயதாகி விட்டது. அவரால் நடக்கவே முடியவில்லை. அதிக முறை வென்றவர் என்ற பெருமைக்காக போட்டியிடுகிறார். ஒவ்வொரு முறையும் இது தான் எனது கடைசி தேர்தல் என்கிறார்' என என்னை கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
இபிஎஸ், வழக்கமாக பேசும் பொய்களில் இதுவும் ஒன்று. வேண்டுமானால், இபிஎஸ்யை என்னோடு நடை போட்டிக்கு வரச் சொல்லுங்கள் பார்ப்போம். எனக்கு மக்களின் வரவேற்பு எப்படி உள்ளது என்பதை, நீங்களே வந்து பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்டாலினுடன் சைக்கிள் ஓட்ட முடியுமா மக்கள் எதிர்பார்ப்பு.
இவர்கள் இருவருமே பேசுவதுஅரசியல்வாதிகள் பேசுவது போன்றே இல்லை என்னவோ சண்டைக்கு தயாரா என்று ஒருவருக்கொருவர் கூப்பிடுவது போல இருக்கிறதே இதுபோன்ற பேச்சுக்களை இனி எந்த கட்சி பிரமுகர்களும் தடை செய்ய வேண்டும் நாகரிகமாக மக்களிடையே பேசவேண்டும் படிப்பறிவு இல்லாத பாமர மக்கள் இடையே நடக்கும் வாக்கு வாதம் போலிருக்கிறது அந்தகோ பரிதாபம்
வயதானாலும் குசும்பு தான்
இப்பவோ அப்பவோ? இதெல்லாம் ...
நான் சைக்கிள் ஒட்டி சம்பாதிச்சவன்னு சொல்றாரு , ஆனால் இப்போ அவர் குடும்ப ஆளுங்க கிட்டே குறைஞ்சது 5000 கோடி சொத்து இருக்குது , கொள்ளை அடிப்பதற்கு ஒரு லிமிட் இல்லையா , தமிழனே நீ எப்பொழுது விழித்து கொள்ள போகிறாய்
அதானே கரோனாவே ஓடிப்போச் நயினாவ பாத்து
ஆக மக்கள் பணி செய்யத் தகுதி இல்லை.நடைப் பயிற்சி மட்டும் தாந்.இதை விட காசு வசூல் போட்டி வைத்தால் கண்டிப்பாக நீங்கள் வெல்வீர்கள்.
போட்டோ போசே கட்டுது எவ்வளஜவு பெரிய கட்டூமஸ்தான் என்று
ஒன்று மட்டும் நிச்சயம் து முருகனை போல யாருமே லஞ்சலாவலயங்களில் போட்டி போட முடியாது என்பதை ஒப்புக்கொள்வோம். மணல் கொள்ளைக்கு சவால் விட்டு கூப்பிடுங்கள் அதில் உங்களை யாராலும் ஜெயிக்கவே முடியாதுங்க து முருகா
உம்ம நடையழகு பாராட்டத்தகாதுமேலும்
-
சீமான் பேச்சுகள் வெறும் ‛‛சவடாலா'' இல்லை ‛‛சவாலா'': அதிர்ச்சியில் ‛‛அன்பு தம்பிகள்''
-
விஜய் வேட்பு மனு திருச்சி கிழக்கில் ஏற்பு; பெரம்பூரில் நிறுத்தி வைப்பு
-
தமிழகம் தான் டபுள் டிஜிட் வளர்ச்சி; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
திருநெல்வேலியில் நாளை விஜய் பொதுக்கூட்டம்: 51 நிபந்தனை விதித்த போலீசார்
-
அதிகார மமதையில் மக்களுக்கு நிகழும் கொடுமைகள்: கமல் காட்டம்
-
இனி ஆந்திர தலைநகர் அமராவதி: அதிகாரப்பூர்வமாக அரசிதழ் வெளியீடு