சுயேச்சை வேட்பாளர் சந்துருஜி தேர்தல் பிரசாரம்
புதுச்சேரி: முத்தியால்பேட்டை தொகுதி சுயேச்சை வேட்பாளர் சந்துருஜி நேற்று காஸ் அடுப்பு சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
வேட்பாளர் சந்துருஜி நேற்று பெல்கிஸ் தெரு, ஹவுசிங் போர்டு குவாட்டர்ஸ், மந்தைவெளி மாரியம்மன் கோவில், தெற்கு சோலைநகர், அம்பேத்கர் நகர், அங்காளம்மன் நகர் மற்றும் டிவி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த பெண்கள் சந்திப்பில் சுமார் 2500 பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இதில் சந்துருஜி மக்களுடன் நேரடியாக சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, விரைவில் தீர்வு காண உறுதியளித்தார். மேலும் குடிநீர், சாலைகள், கழிவுநீர் வடிகால், பாதுகாப்பு வசதிகள் போன்ற அடிப்படை தேவைகளை முன்னுரிமையுடன் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தார். பெண்கள் அதிக அளவில் திரண்டு ஆதரவு தெரிவித்தது, முத்தியால்பேட்டை தொகுதியில் மாற்றத்திற்கான மக்கள் மனநிலையை வெளிப்படுத்துகிறது.
மேலும்
-
தி.மு.க.,வில் வாரிசுகளுக்கே 'சீட்' ;செல்வகுமார் குற்றச்சாட்டு
-
கள் இறக்கிய நபர் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு
-
கோச்சிங் சென்டருக்கு குண்டு மிரட்டல் விடுத்தவரை பிடித்த போலீசுக்கு பாராட்டு
-
35 வயது நபர் கொலை:65 வயது நபருக்கு 'காப்பு'
-
பைக் மீது லாரி மோதியது;லாரி டிரைவர் சிக்கினார்
-
ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை