ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
புதுடில்லி:ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்த, 80 வயது முதியவர், உரிமம் பெற்ற தன் கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உம்ராவ் சிங் என்பவர், சுவிதா குஞ்ச் என்ற இடத்தில், பிதாம்புராவில் வசிக்கிறார். இவருக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணமான இவர்கள், தனித்தனியே ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனர். மேலும், திருமணமான மகள்களும் உண்டு.
இந்நிலையில், காலை இவர், அவுட்டர் டில்லி மாவட்டத்தின் மங்கோல்புரி என்ற இடத்தில் உள்ள தன் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த சில ஆண்டுகளாக, அவர் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், அதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement