கோச்சிங் சென்டருக்கு குண்டு மிரட்டல் விடுத்தவரை பிடித்த போலீசுக்கு பாராட்டு
புதுடில்லி:'நான் பிரபல தாதா கோஷ்டியை சேர்ந்தவன். எனக்கு, 21 லட்ச ரூபாய் தராவிட்டால், கோச்சிங் சென்டரை வெடிகுண்டு வைத்து தகர்த்து விடுவேன்' என கூறி, மிரட்டிய நபரை, மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில், வட மேற்கு டில்லி போலீசார் கைது செய்தனர்.
இதற்காக, 2,800 கி.மீ., பயணம் செய்து, பல இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆராய்ந்து, அந்த நபரை கைது செய்துள்ள போலீசாரை, அதிகாரிகள் பாராட்டுகின்றனர்.
போலீசார் கைது செய்துள்ள நபர் ஏற்கனவே இதுபோல, சத்தீஸ்கர் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் சிலரை மிரட்டி வந்துள்ளார். அது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அந்த நபர் டில்லியிலும் கைவரிசை காட்டியுள்ளார்.
அவரை மிகுந்த சிரமங்களுக்கு இடையே கைது செய்துள்ள போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காரைக்குடியில் சைக்கிளில் வந்த விஜய்: பேசாமல் சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றம்
-
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்: பாஜ தாராள வாக்குறுதி
-
படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை; பிரசாரத்தில் அள்ளிவிட்ட சீமான்
-
ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்பு
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா
-
தவெக தலைவர் விஜய் பிரசார வாகனத்தில் பறக்கும் படையினர் திடீர் சோதனை
Advertisement
Advertisement