சங்கர வித்யாலயா பள்ளிகளின் ஆண்டு விழா   

புதுச்சேரி: புதுச்சேரி இ.சி.ஆர். மற்றும் மகாத்மா காந்தி வீதியில் இயங்கி வரும் சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளிகளின் ஆண்டு விழா இ.சி.ஆரில் பள்ளி வளாகத்தில் நடந்தது.

காஞ்சிபுரம், சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகா வித்யாலயா நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் கல்வித்தறை தலைவர் வேங்கடரமணன் கலந்து கொண்டு, வாழ்த்தி பேசினார். சங்கரா கல்வி அறக்கட்டளையின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பள்ளி தாளாளர் வழக்கறிஞர் பட்டாபிராமன் வரவேற்றார். இ.சி.ஆரில் உள்ள பள்ளியின் முதல்வர் சுமித்ரா ஸ்ரீநிவாசன் ஆண்டு அறிக்கை வாசித்தார். மாகாத்மா காந்தி வீதியில் இயங்கி வரும் பள்ளியின் முதல்வர் தர்மசம்வர்தனி, துணை முதல்வர் பவானி மாணவர் சாதனைகளை விளக்கி பேசினர்.

தொடர்ந்து, 2023-24, 2024- 25 ம் கல்வி ஆண்டுகளில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கும், பாடவாரியாக 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சியை அளித்த ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

பள்ளியின் துணை முதல்வர் காயத்ரி ராகவன் நன்றி கூறினார். இரண்டு பள்ளி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

Advertisement