குமாரபாளையம் தி.மு.க., வேட்பாளர் பாலுவை ஆதரித்து கனிமொழி எம்.பி., பிரச்சாரம்

பள்ளிப்பாளையம்: குமாரபாளையம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் பாலுவை ஆத-ரித்து, துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., குமாரபா-ளையம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.


குமாரபாளையம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் பாலுவை ஆத-ரித்து, துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., குமாரபா-ளையம் பகுதியில் பள்ளிப்பாளையம் பிரிவு சாலையில், நேற்று மாலை திறந்த வேனில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்நிகழ்ச்-சியில் குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட நகரம், ஒன்றியம், டவுன் பஞ்., நிர்வாகிகள், மற்றும் கூட்டணி கட்சியினர், பொது மக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
அதேபோல் நேற்று முன்தினம், குமாரபாளையம் நகரத்தின் பல்-வேறு பகுதியில், குமாரபாளையம் தொகுதி தி.மு.க., வேட்-பாளர் பாலு, மக்களை சந்தித்து ஓட்டு சேகரித்தார். அப்போது, வேட்பாளர் பாலு பேசுகையில்,'' ஐந்து ஆண்டுகளில், தி.மு.க., அரசால் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சி திட்டப்பணிகளை விளக்கி, மீண்டும் நல்லாட்சி தொடர உதய சூரியன் சின்னத்தில் வாக்க-ளிக்க வேண்டும்,'' என கேட்டுக் கொண்டார். மேலும் வெற்றி பெற்றால் மக்களின் அடிப்படை தேவைகள், கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவேன், மக்களுக்காக பாடுவேன், மக்க-ளுக்கும், தொகுதிக்கும் தேவையான வளர்ச்சி திட்டப்பணிகளை செய்து கொடுப்பேன் என, தெரிவித்தார்.
வேட்பாளர் பாலு ஓட்டு சேகரிக்க சென்ற இடமெல்லாம், மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். பிரச்சாரத்தில் தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள்
உடன் சென்றனர்.
இன்று (10 தேதி) காலை முதல் பள்ளிப்பாளையம் ஒன்றியம் பகுதியில், தி.மு.க., வேட்பாளர் பாலு மக்களை சந்தித்து ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்கிறார்.

Advertisement