தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர்: மார்ட்டின் மனைவி சொத்து கணக்கு இதோ
நமது நிருபர்
லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் லீமா ரோஸ் மார்ட்டின் சொத்து கணக்கு விபரம் வெளியாகி உள்ளது.
பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் குடும்பத்தினர், வெவ்வேறு கட்சிகளில் உள்ளனர். அதிமுகவில் சமீபத்தில் சேர்ந்த மார்ட்டின் மனைவி லீமா ரோஸ், திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் வேட்பு மனுவுடன் இணைத்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ள சொத்துக்கணக்கு விபரம் வெளியாகி உள்ளது.
அசையும் சொத்து விவரம்
வேட்பாளர் பெயரில்: 139 கோடி ரூபாய் மதிப்புக்கு நகை உள்ளிட்ட சொத்துக்கள் உள்ளன.
கணவர் பெயரில்: 3262 கோடி ரூபாய் மதிப்புக்கு நகை உள்ளிட்ட சொத்துக்கள் உள்ளன.
அசையா சொத்து
வேட்பாளர் பெயரில்: 909 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம், கட்டிடங்கள் உள்ளிட்ட அசையா சொத்துக்கள் உள்ளன.
கணவர் மார்ட்டின் பெயரில்: 887 கோடி ரூபாய் மதிப்புக்கு கட்டிடங்கள் நிலம் ஆகியவை உள்ளன.
இது தவிர மகன் ஜோஸ் டைசன் என்பவர் பெயரிலும் 662 கோடி மதிப்புக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளன.
தாக்கல் செய்துள்ள சொத்து கணக்கு விபரங்களின்படி தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர் லீமா ரோஸ் மார்ட்டின் தான் என்பது தெரியவந்துள்ளது.
@quote@மகன் பெயரிலும் ரூ.662 கோடிக்கு சொத்து உள்ளதுquote
பாஜக வாஷிங் மெஷின் இருக்கும் போது எந்த வித பயமும் இல்லை.
ok i agree
இதைவிட டீம்கா அமைச்சர்கள் முதன்மை அமைச்சர் குடும்பங்களுக்கு பல லட்சம் கோடி சொத்து உள்ளது. ஆனால் பல பல பினாமிகள் பெயரில் உள்ளது. நாங்க கோடி ரூவா காரை உபயோக படுத்துவோம். ஆனால் எங்க பேர்ல இருக்காது. காலம் முழுவதும் பிச்சைக்காரங்களா காட்டிப்போம்
லாட்டரி சீட்டு துண்டு சீட்டுக்கு டஃப் குடுக்கும் போல தெரியுதே. .
போலி லாட்டரி மூலம்.கணக்கில் வராத பணம் இதை விட பல மடங்கு இருக்க போல.
மார்ட்டின் கடுமையான உழைப்பாளி. அவரது மனைவி நிச்சயம் இரட்டை இலையில் ஜெயிக்க வாய்ப்புள்ளது.
சேவை செய்யுற ஆளு …மக்களுக்கு இவங்க தான்
பாஜக அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் மாதம் 1000 ரூ போலி லாட்டரி சீட்டு இலவசமாக வழங்கப்படும்.மேலும்
-
மகாசக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா
-
பித்தளை - செம்பு பாத்திர தொழிலாளர் சம்பள உயர்வு ஒப்பந்தம் கையெழுத்து
-
இறுதிக்களத்தில் 116 வேட்பாளர்கள்! மாவட்டத்தில் இனி 'அனல்' பறக்கும்
-
பொள்ளாச்சி - 13, வால்பாறை - 6, கிணத்துக்கடவு - 5 பேர் போட்டி
-
தடுப்பு அமைக்க மக்கள் கோரிக்கை
-
கத்தரி சாகுபடியில் மகசூல் இழப்பு தவிர்க்க அறிவுரை