பித்தளை - செம்பு பாத்திர தொழிலாளர் சம்பள உயர்வு ஒப்பந்தம் கையெழுத்து

அனுப்பர்பாளையம்:பித்தளை மற்றும் செம்பு பாத்திர தொழிலாளர் சம்பள உயர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.


அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம், ஆத்துபாளையம், அங்கேரிபாளையம் ஆகிய பகுதிகளிலுள்ள பாத்திர உற்பத்தி பட்டறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, புதிய சம்பள பேச்சுவார்த்தையில், எவர் சில்வர் பாத்திர தொழிலாளர்களுக்கான பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தானது.

பித்தளை மற்றும் செம்பு பாத்திர தொழிலாளர்களுக்கான சம்பள ஒப்பந்தம் குறித்து, 10வது கட்ட பேச்சு, நேற்று மாலை தொழிலாளர் துறை அலுவலகத்தில் நடந்தது. இதில், உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் பித்தளை மற்றும் செம்பு பாத்திர உற்பத்தி தொழிலாளர்களுக்கு, 23 சதவீதமும், பித்தளை ஈய பூச்சு பாத்திரங்களுக்கு, 30 சதவீதமும் சம்பள உயர்வு தருவதாக கூறினர். இதனால், பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இரு தரப்பினரும் அதிகாரி முன்னிலையில், 3 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

---



பித்தளை மற்றும் செம்பு பாத்திர தொழிலாளர் சம்பள உயர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

Advertisement