மகாசக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா

அவிநாசி:அவிநாசி அருகே பெரியகருணைபாளையம் மங்கள விநாயகர், மகாசக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா நிறைவடைகிறது.

கடந்த 4ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தினமும் பூவோடு எடுத்தல், அபிஷேகம், கம்பம் ஆடுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று அம்மை அழைத்தல், மாவிளக்கு, பொங்கல் வைபவம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மஞ்சள் நீர் விழா, அலங்கார பூஜையுடன் விழா முடிகிறது.

---

சிறப்பு அலங்காரத்தில் மகாசக்தி மாரியம்மன்.

Advertisement