உழவர்கரையில் த.வெ.க., வேட்பாளர் நலத்திட்டங்களை கூறி ஓட்டு சேகரிப்பு
புதுச்சேரி: உழவர்கரை தொகுதியை மாற்றத்தினை த.வெ.க.,வினால் மட்டுமே தர முடியும் என வேட்பாளர் சசிபாலன் தெரிவித்தார்.
உழவர்கரை தொகுதி த.வெ.க., வேட்பாளர் சசிபாலன் நேற்று வீதி, வீதியாக சென்று தான் செய்த நலத்திட்டங்களை பட்டியலிட்டு மக்களிடம் விசில் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பேசியதாவது:
வளர்ச்சியில்லாமல் உழவர்கரை தொகுதி பின்தங்கியுள்ளது. இதனால் எனது முயற்சியில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன்.
அதில், பசில்லாத உழவர்கரை என்ற திட்டத்தினை ஆரம்பித்து செயல்படுத்தி வருகிறேன். பசுமை உழவர்கரை மூலம் மரக்கன்றுகளை நட்டு பசுமையாக்கும் பணியை துவக்கியுள்ளேன். கர்ப்பிணி பெண்களுக்காக பயணம் இனிதே திட்டத்தை ஆரம்பித்துள்ளேன். உதிரம் கொடுத்து உயிர் காப்போம் திட்டம் செயல்படுத்தி வருகின்றேன்.
உழவர்கரை தொகுதியை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் த.வெ.க., கட்சியால் மட்டுமே அது சாத்தியம் எனக் கூறி ஓட்டு சேகரித்தார்.
மேலும்
-
அரசு நிலத்தில் வசித்தோருக்கு பட்டா என் கோரிக்கையால் வழங்கப்பட்டது: மதுரவாயலில் தி.மு.க., காரம்பாக்கம் கணபதி பெருமிதம்
-
வேளச்சேரிக்கு ஆக்கப்பூர்வமான திட்டங்களை அ.தி.மு.க., வேட்பாளர் அசோக் செய்து தருவார் நடிகர் ரவி மரியா பிரசாரம்
-
மாநகராட்சி அலட்சியத்தால் குவிந்த குப்பை ;களமிறங்கி துாய்மைப்படுத்திய போலீசார்
-
குடிநீரில் கழிவுநீர் கலப்பு: வேளச்சேரி மக்கள் தவிப்பு
-
மெட்ராஸ் ஜிம்கானா அணி கிளப்: டென்னசில் 'சாம்பியன்'
-
ஓய்வு பெற்ற நடத்துநரை தாக்கிய வாலிபர் கைது