மெட்ராஸ் ஜிம்கானா அணி கிளப்: டென்னசில் 'சாம்பியன்'
சென்னை: சென்னையில் நடந்த கிளப்களுக்கு இடையிலான டென்னிஸ் தொடரில், மெட்ராஸ் ஜிம்கானா அணி, 'சாம்பியன்' பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது.
தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில், சென்னை கிளப்களுக்கு இடையிலான 33வது சன்மார் டென்னிஸ் தொடர் போட்டி, சென்னையின் பல்வேறு மைதானங்களில் நடந்தது.
சென்ட்ரல் அருகே பூங்கா பகுதியில் உள்ள மெட்ராஸ் ஜிம்கானா கிளப்பில் நடந்த 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான இறுதிச்சுற்றில், மெட்ராஸ் ஜிம்கானா அணி, காஸ்மோபாலிட்டன் கிளப் அணியுடன் மோதியது.
துவக்கத்தில் சரிவைச் சந்தித்த ஜிம்கானா கிளப் அணி, பின் சுதாரித்ததால் 6 - 3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றியது.
இரண்டாவது செட்டில், மீண்டு வந்த காஸ்மோபாலிட்டன் அணி, ஜிம்கானா கிளப்பின் சர்வீஸ்களை முறியடித்து, 6 - 0 என வென்று, ஆட்டத்தை சமன் செய்தது.
வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி செட்டில், அபாரமாக விளையாடிய ஜிம்கானா அணியின் முரளி - சங்கர் ஜோடி, எதிரணி வீரரான மணிவண்ணனின் சர்வீஸை முறியடித்து, 6 - 3 என்ற கணக்கில் போட்டியை கைப்பற்றியது. முடிவில் 2 - 1 என்ற மொத்த புள்ளியில், சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றது.
மேலும்
-
தொகுதி வாரியாக 'பூத் சிலிப்' அனுப்பி வைப்பு இன்று காலை முதல் வழங்கும் பணி துவக்கம்
-
நண்பனுக்கு மிரட்டல் சகோதரர்களுக்கு 'காப்பு'
-
காவலக்குடி பள்ளியில் முப்பெரும் விழா
-
தேங்காய் வியாபாரியிடம் ரூ.94,300 பறிமுதல்
-
தேர்தல் வாகன சோதனையில் ரொக்கப்பணம் பறிமுதல்
-
ஓடும்போது மயங்கிய டிரைவர் தோட்டத்தில் புகுந்த அரசு பஸ்