காங்கேயம் அ.தி.மு.க., வேட்பாளர் மனு தாக்கல் இனாம் நில பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதி


காங்கேயம், காங்கேயம் சட்டசபை தொகுதி

யில் அ.தி.மு.க., வேட்பாளரான என்.எஸ்.என்.நடராஜ், காங்கேயம் தாலுகா அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் பாலமுருகனிடம், நேற்று மனுதாக்கல் செய்தார். அவருடன் நகர செயலர் வெங்கு மணிமாறன், காங்கேயம் தொகுதி பொறுப்பாளர் ராமலிங்கம், பா.ஜ., திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மோகனப்பிரியா உடனிருந்தனர்.

பிறகு நிருபர்களிடம் என்.எஸ்.என்.நடராஜ் கூறியதாவது: காங்கேயம் தொகுதியில், 20-11-16 தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆனேன். அந்த கால கட்டத்தில் முள்ளி
புரம் கல்லுாரி கொண்டு வந்தோம். தொகுதியில் பாலங்களை கட்டி கொடுத்தோம். காங்கேயம், வெள்ளகோவில், சென்னிமலை பகுதியில் தீயணைப்பு நிலைய கட்டடங்கள் கட்டப்பட்டன. சட்டமன்ற அலுவலகம், 24 மணி நேரம் ஏழு நாட்களும் கட்சியினர் வந்து செல்லும் அமைப்பாக இருந்தது. மக்களின் பிரச்னைக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது. காங்கேயம் ஒன்றியம், காங்கேயம் நகரம், குண்டடம் ஒன்றியம், வெள்ளகோவில் ஒன்றியம், முத்துார் பேரூராட்சி, சென்னிமலை பகுதிகளில் கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்றியதால், 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில், காங்கேயம் தொகுதியில் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்த்தது. மேலும் முதல்வர் ஜெயலலிதா மறைந்த நிலையில், அடுத்த முதல்வராக வந்த இடைப்பாடி பழனிசாமி, சிறப்பான ஆட்சி தந்தார்.
எடப்பாடி பழனிசாமி முதல்வரானவுடன், இனாம் நில பிரச்னைக்கு தீர்வு கண்டு, உரிய நிலம் உள்ளவர்களுக்கு சரி செய்து கொடுப்பார்கள். காங்கேயத்தில் அ.தி.மு.க.,வுக்கு மக்கள் வரவேற்பு மிக சிறப்பாக இருக்கிறது. தற்போது நாய்களால் பலியான ஆடுகள் உயிரிழப்புக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை. அரசு ஒப்புதல் வழங்கியும் பலனில்லை. பழனிசாமி முதல்வரானவுடன் பாதிப்புள்ளாகிய விவசாயி
களுக்கு, ஒரே மாதத்தில் இழப்பீடு வழங்கப்படும். பி.ஏ.பி., பாசன திட்டத்தில் காங்கேயம் தொகுதி விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் பெற்று தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement