ஓட்டுக்கு பட்டுவாடா செய்ய பணம் பதுக்கல்? ஜாபர் சாதிக், அமீர் வீடுகளில் 'ரெய்டு'
சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளியே வந்துள்ள தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் வீடு, அலுவலகங்களில், வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்தவர் ஜாபர் சாதிக். பல ஆண்டுகளுக்கு முன், பிழைப்புக்காக சென்னை வந்த இவர், உணவகம், தனியார் தங்கும் விடுதிகள், ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்தார்; தி.மு.க.,வில், சென்னை மேற்கு மாவட்ட அயலக பிரிவு துணை அமைப்பாளராகவும் இருந்தார்.
கடந்த 2024ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு உணவு பொருட்கள் என கூறி, 2,000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள போதைப் பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். அதன் பின், அவரின் சகோதரரும், வி.சி., முன்னாள் நிர்வாகியுமான முகமது சலீமும் கைது செய்யப்பட்டார்.
டில்லி திஹார் மற்றும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரும், ஜாமின் பெற்று வெளியில் உள்ளனர்.
இந்நிலையில், ஜாபர் சாதிக் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களின் பல கோடி ரூபாய் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்து உள்ளது.
இதையடுத்து, சென்னை அண்ணா சாலை, புரசைவாக்கம் மற்றும் எழும்பூரில் ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான ஜே.எஸ்.எம்., தங்கும் விடுதி, எழும்பூர் எத்திராஜ் கல்லுாரி அருகே உள்ள ஜே.எஸ்.எம்., தங்கும் விடுதியின் தலைமை அலுவலகம், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள ஜாபர் சாதிக் வீடு, அலுவலகம் என, 10க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று சோதனை நடத்தினர்.
அதேபோல, சென்னை தி.நகரில் உள்ள ஜாபர் சாதிக்கின் நெருங்கிய நண்பரும், திரைப்பட இயக்குநருமான அமீர் வீட்டிலும் சோதனை நடத்த அதிகாரிகள் சென்றனர். வீடு பூட்டப்பட்டிருந்ததால், சோதனை நடத்த முடியாமல் திரும்பினர்.
இச்சோதனையின் போது, ஜாபர் சாதிக் வீடு, அலுவலகங்களில் இருந்து கட்டுக்கட்டாக ஆவணங்களை அதிகாரிகள் அள்ளி சென்றுள்ளனர்.
இது பல மாநிலங்களை தாண்டிய நெட்ஒர்க். ஒரு போதை கன்சைன்மென்ட் மட்டுமே 2000 கோடி ரூபாய் என்றால் எவ்வளவு 5 ஆண்டுகளில் நடந்து இருக்கும். எவ்வளவு பணம் தீவிரவாதத்திற்கு சென்றது என்று தெரியவில்லை.
அமீர் வீட்டை நன்றாக சோதனை செய்யுங்கள்.... போதை பொருள் மூலம் கிடைத்த பணத்தில் படம் எடுத்தவர்..... இவருக்கு அனைத்தும் தெரிந்து இருக்க வாய்ப்புள்ளது.
போதை வியாபார மொத்த ஸ்டாக்கிஸ்ட்டுகளையே ஜாமீனில் வெளியே வரக் கூடிய பிரிவுகளில் மத்திய அரசே சிறை வைத்து வெளியில் வரும் படி செய்தால் எப்படி?
போதை பவுடர்கள் வித்த காசு அளவில்லாமல் இவர்களிடம் நிச்சயம் இருக்கும் திமுகவின் தொழில் தர்மபபடி தேர்தலுக்கு அள்ளி அள்ளி ஓட்டுக்காக கொடுப்பார்கள்
இந்த அமீர் தான் மற்றவர்களுக்கு ஒழுக்கம் போதிப்பது , இந்த மாதிரி வைரஸ் அடியோடு ஏன் வேரறுப்பதில்லை ?
மற்ற கட்சிகள் ரொம்ப யோக்கியம். ஒரு சில கண்ணுக்குத் தெரியாத தூர தூக்கி எறியப்பட்ட, எரிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட , ஒதுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட நல்லவர்களைத் தவிர அத்தனை பெரும் அயோக்கியர்கள்.
ரங்கசாமி அண்ணே , காசு கொடுப்பதை விட மோசமான விஷயத்தில் இந்த ஆடு அமீர் , அயலக அணித்தலைவர் ஜாபர் போன்றோர் ஈடுபட்டுள்ளனர் , அது போதைமருந்து , அதை செய்வோரை கல்லை கட்டி கடலில் மீனுக்கு இரையாக்க வேண்டும்மேலும்
-
மாவட்டத்தில் 218 மனுக்களில்... 160 ஏற்பு! 7 தொகுதிகளில் 43 தள்ளுபடி
-
நெடுஞ்சாலை குப்பைகளில் தீ ;வாகன ஓட்டிகள் கடும் அவதி
-
பதற்றம் நிறைந்த ஓட்டுச்சாவடிகள் :சப் கலெக்டருடன் எஸ்.பி., ஆலோசனை
-
பொறியியல் கல்லுாரி விளையாட்டு விழா
-
வராஹி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமி பூஜை
-
அ.தி.மு.க., வேட்பாளருடன் பா.ம.க., மகளிரணி பிரசாரம்