அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் அ.தி.மு.க., மாநில பொதுக்குழு உறுப்பினர் பேச்சு

இடைப்பாடி: இடைப்பாடி தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் இ.பி.எஸ்.,க்கு, அக்கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்-கடேஷ், நங்கவள்ளி டவுன் பஞ்சாயத்து, ஒன்றிய பகுதிகளில் ஓட்டு சேகரித்தார்.


இடைப்பாடி தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளராக அக்கட்சி பொதுச்செயலர், இ.பி.எஸ்., போட்டியிடுகிறார். அவருக்கு ஓட்டு கேட்டு, அக்கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், நங்கவள்ளி டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரசாரம் செய்தார். அங்குள்ள கடைவீதியில் ஜவுளி கடைகள், ஹோட்டல், பெட்டி கடை, மளிகை, பழக்கடைகளில், இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார்.அப்போது வெங்கடேஷ் பேசியதாவது:
தேர்தல் அறிக்கையில் கூறியபடி, அ.தி.மு.க., ஆட்சி அமைந்-ததும், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும், 10,000 ரூபாய் வழங்கப்படும். அதேபோல் விவசாய பயிர்
கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்; குலவிளக்கு திட்டத்தில் ரேஷன் கார்டு மூலம் மகளிருக்கு, 2,000 ரூபாய் வழங்கப்படும்; ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு, 3 காஸ் சிலிண்டர்கள் வழங்-கப்படும்; வீடு இல்லாதவர்களுக்கு கட்டித்தரப்படும்; அனைத்து வீடுகளுக்கும் ப்ரிட்ஜ் தரப்படும்; பெண்கள் ஸ்கூட்டி வாங்க, 25,000 ரூபாய் மானியம் வழங்கப்படும். அத்துடன் அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்.
இ.பி.எஸ்., கொண்டு வந்த, 100 ஏரி திட்டத்தை, தி.மு.க., செயல்படுத்தவில்லை. மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைந்-ததும், 100 ஏரி திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும். அதேபோல், தி.மு.க., ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, டவுன் பஞ்சாயத்தில் உள்ள அனைத்து வார்டு பகுதிக-ளிலும் துண்டு பிரசுரங்களை வழங்கி ஓட்டு சேகரித்தார். அப்-போது நங்கவள்ளி பேரூர் செயலர் சேகர், வடக்கு ஒன்றிய செயலர் மாணிக்கவேல், மாவட்ட மகளிர் அணி தலைவி ஆனந்தி, மாரிமுத்து, மாவட்ட மகளிர் அணி இணை செயலர் பானுமதி, பாலசுப்ரமணியன், ஒன்றிய பொருளாளர் மணிவேல், ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் துணைத்தலைவர் சண்முகம், வார்டு செயலர்களும் ஓட்டு
சேகரித்தனர்.

Advertisement