மண்ணாடிப்பட்டை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்; காங்., வேட்பாளர் செல்வம் உறுதி
புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதி காங்., வேட்பாளர் செல்வம், திருக்கனுார் பகுதியில் தனது ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று கை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
அவருக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
வேட்பாளர் செல்வம் கூறுகையில், 'நான் இந்த ஊரை சேர்ந்தவன், மக்கள் தங்களின் பிரச்னைக்காக எந்த நேரத்திலும் என்னை சந்திக்கலாம். ஏழை மக்களின் கஷ்டங்கள் எனக்கு நன்கு தெரியும். மக்கள் தான் என்னுடைய கடவுள். மக்களை நம்பி தான் தேர்தலில் போட்டியிடுகிறேன்.
மண்ணாடிப்பட்டு தொகுதியில் மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் கொண்டு வருவதற்காக போராடுவேன். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.
என்னை வெற்றிப்பெற செய்தால், புதுச்சேரியிலேயே, மண்ணாடிப்பட்டு தொகுதியை அனைத்து வசதிகளுடன் கூடிய முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்' என்றார்.
மேலும்
-
காரைக்குடியில் சைக்கிளில் வந்த விஜய்: பேசாமல் சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றம்
-
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்: பாஜ தாராள வாக்குறுதி
-
படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை; பிரசாரத்தில் அள்ளிவிட்ட சீமான்
-
ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்பு
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா
-
தவெக தலைவர் விஜய் பிரசார வாகனத்தில் பறக்கும் படையினர் திடீர் சோதனை