புதுச்சேரிக்கான மாற்றத்தை த.வெ.க., ஏற்படுத்தும்; சாமிநாதன்
புதுச்சேரி: லாஸ்பேட்டை தொகுதி த.வெ.க., வேட்பாளர் சாமிநாதன் இறுதி நாளில் பேரணியாக சென்று விசில் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
மகாவீரர் நகரில் துவங்கிய பேரணி பெத்து செட்டிபேட்டை, வள்ளலார் நகர், ஆனந்தா நகர், சாந்தி நகர், லாஸ்பேட்டை வழியாக கட்சி அலுவலகத்தில் பிரசாரத்தில் நிறைவடைந்தது. மற்றொரு பேரணி தொகுதி தலைவர் தலைமையில், உழவர்சந்தையில் துவங்கி அசோக் நகர், குமரன் நகர், குறிஞ்சி நகர், ஜீவானந்தபுரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டது.
த.வெ.க., வேட்பாளர் சாமிநாதன் பேசுகையில், 'புதுச்சேரி மாநிலம் ரங்கசாமி, நாராயணசாமி, அன்பழகன், சிவா என, குறிப்பிட்டவர்களிடம் சிக்கியுள்ளது. இவர்களுக்குள் சிண்டிகேட் அமைத்து மாநில வளர்ச்சியை பின் தங்க செய்துவிட்டனர்.
கடந்த 50 ஆண்டுகளாக மாநிலத்தில் எந்த வளர்ச்சியும் இல்லை. இதற்கு ஆண்ட அரசுகள், ஆளும் அரசுகளிடம் தொலைநோக்கு பார்வை இல்லை. புதுச்சேரி மக்கள் இந்த முறை புதியவர்களுக்கு ஓட்டளிக்க வேண்டும். புதுச்சேரிக்கான மாற்றத்தை த.வெ.க.,வினால் ஏற்படுத்த முடியும். பொதுமக்கள் சிந்தித்து ஓட்டளிக்க வேண்டும்' என்றார்.
மேலும்
-
தேர்தல் ஆணைய செயல்பாடு சரியில்லை: பழைய அனுபவத்தில் கார்த்தி எம்.பி., சர்டிபிகேட்
-
பாலாபிஷேகம்
-
நிலமே இல்லாத பழனிசாமி விவசாயி என்று ஏமாற்றலாமா: அமைச்சர் பெரியகருப்பன் கேள்வி
-
தனித்தொகுதி வேட்பாளர் விவகாரம்: தேர்தல் கமிஷன் பதில் அளிக்க உத்தரவு
-
எல்லையோர மது கடைகள் மூன்று நாட்கள் மூடல்
-
செக் ஷன்-17 நில பிரச்னைக்கு தீர்வு: தி.மு.க., வேட்பாளர் உறுதி