முன்மாதிரி தொகுதியாக மாற்றப்படும்; உளுந்துார்பேட்டை வேட்பாளர் குமரகுரு உறுதி
உளுந்துார்பேட்டை: 'முன்மாதிரியான தொகுதியாக உளுந்துார்பேட்டை மாற்றப்படும்' என தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு பேசினார்.
இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு கிராமப்புறங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்ட அவருக்கு கிராம மக்கள் பட்டாசு வெடித்து, மாலை அணிவித்து, பெண்கள் ஆர்த்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர்.
அப்போது அவர் பேசுகையில், 'அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பதவி ஏற்றவுடன் மக்களுக்கான அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றி தரப்படும். தி.மு.க., ஆட்சியில் தலைவிரித்தாடும் கஞ்சா போதை, கொலைகள் அனைத்தும் அ.தி.மு.க., பொறுப்பேற்றவுடன் 3 மாதத்தில் ஒழிக்கப்படும்.
ஆண்கள், பெண்கள் என வேறுபாடுகளின்றி அனைத்து தரப்பினருக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும். தமிழகத்திலேயே முன்மாதிரியான தொகுதியாக உளுந்துார்பேட்டை தொகுதியை மாற்றுவதற்கான அனைத்து திட்டங்களும் பழனிசாமி வழிகாட்டுதலின் பேரில் நிறைவேற்றப்படும்' என்றார்.
ஒன்றிய செயலாளர் சந்திரன். மாவட்ட மாணவரணி செயலாளர் பாக்யராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர்,, இளைஞரணி தலைவர் ஸ்ரீதர், முன்னாள் மாவட்ட துணை தலைவர் ராமசாமி, நிர்வாகிகள் வெங்கடேசன், காமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
காரைக்குடியில் சைக்கிளில் வந்த விஜய்: பேசாமல் சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றம்
-
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்: பாஜ தாராள வாக்குறுதி
-
படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை; பிரசாரத்தில் அள்ளிவிட்ட சீமான்
-
ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்பு
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா
-
தவெக தலைவர் விஜய் பிரசார வாகனத்தில் பறக்கும் படையினர் திடீர் சோதனை