ஆயிரம்விளக்கில் 'விசேஷ' துண்டு பிரசுரம் ;பரபரப்பை கிளப்பிய த.வெ.க., பிரபாகர்

ஆயிரம் விளக்கு: ஆயிரம்விளக்கு தொகுதி த.வெ.க., வேட்பாளர் ஜெ.சி.டி.பிரபாகர், ஓட்டு சேகரிப்பின்போது, வாக்காளர்களிடம் வினியோகித்த துண்டு பிரசுரம், பேசு பொருளாக மாறி உள்ளது.

ஆயிரம்விளக்கு தொகுதி த.வெ.க., வேட்பாளர் ஜெ.சி.டி., பிரபாகர், சூளைமேடு நெடுஞ்சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று, ஓட்டு சேகரிப்பில் ஈடுட்டார்; வாக்காளர்களிடம் துண்டு பிரசுரம் வினியோகித்தார்.

பொதுவாக, துண்டு பிரசுரத்தில் தேர்தல் வாக்குறுதிகள் அல்லது வேட்பாளர் யார் எந்த சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும் என்பது இருக்கும். ஆனால் ஆயிரம்விளக்கு தொகுதி த.வெ.க., வேட்பாளர் பிரபாகர் கொடுத்த துண்டு பிரசுரம், வாக்காளர்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது.

துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

மற்ற கட்சிகள் சுதந்திரமாக பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கிவிட்டு, விஜய்க்கு மட்டும் கட்டுப்பாடுகள், தடைகள் ஏன்; ஜனநாயக படத்திற்கு நடந்தது என்ன; சி.பி.ஐ., வழக்கிற்காக சென்னைக்கும், டில்லிக்கும் அலைக்கழிக்கப்பட்டது ஏன்? விசில் சின்னத்தை சிந்தியுங்கள். உங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வாருங்கள் என, பணிவன்புடன் அழைக்கிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Advertisement