கருணாசுக்கு 'நோ' ; தி.மு.க.,வினர் அடம்
சிவகங்கை தொகுதியில், தி.மு.க., கூட்டணி சார்பில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் போட்டியிடுகிறார்.
கருணாஸ் வெளியூர் நபர் என்பதாலும், திருவாடானையில் வென்றபோது ஒன்றும் செய்யவில்லை என்ற அதிருப்தி நிலவுவதாலும், கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பு தரவில்லை என தி.மு.க., தலைமைக்கு புகார் சென்றது.
முதல்வரின் மருமகன் சபரீசன், நிர்வாகிகளிடம் பேசிய பின்னரும் தொய்வு தொடர்ந்தது. அதனால், திருப்புத்துார் சென்ற முதல்வர் ஸ்டாலின், பரமக்குடி செல்லும் வழியில் சிவகங்கையில்'ரோடு ஷோ' நடத்தி பிரசாரம் செய்தார். அதன்பின்னரும் தி.மு.க., கூட்டணி நிர்வாகிகள் பெரிய அளவில் அக்கறை காட்டவில்லை.
இதனால் அதிருப்தியான தி.மு.க., தலைமை, 'கட்சியில் ஒன்றிய செயலர்களுக்கான தேர்தல் ஜூன் மாதம் நடக்க உள்ளது. ஒழுங்காக வேலை செய்யாதோர் ஓரங்கட்டப்படுவீர்கள்' என எச்சரிக்கை விடுத்தது. இருப்பினும் தி.மு.க.,வினர் களமிறங்காமல் உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திமுக தொடர்ந்து ஆட்சி இல்லை; இந்த முறையும் மக்கள் நிராகரிப்பார்கள்: நயினார் நாகேந்திரன்
-
8,000 ரூபாய் கூப்பனில் என்ன வாங்கப் போகிறீர்கள்? அரசு திட்ட பயனாளிகளிடம் முதல்வர் ஸ்டாலின் கேள்வி
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 அதிகரிப்பு
-
வேலூரில் முதல்வர் ஸ்டாலின்; வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிப்பு
-
தமிழக சட்டசபை தேர்தல்; பாஜ தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு
-
டில்லியில் துணை ஜனாதிபதி சிபிஆர் இல்லத்தில் பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்
Advertisement
Advertisement