உலக வரலாற்றிலேயே கிடையாது: நாதக தோல்வி குறித்து பிரசாரத்தில் சீமான் பேச்சு
சென்னை: உலக வரலாற்றிலேயே இவ்வளவு தோல்வியை சந்தித்த ஒரு அரசியல் இயக்கம் மீண்டும் உற்சாகத்தோடு போட்டியிடுவது இங்கு தான் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
மயிலாப்பூரில் தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசியதாவது: ஒராண்டு, இரண்டு ஆண்டுகளாக இல்லை, 15 ஆண்டுகளாக, 10 ஆண்டுகளாக இந்த தேர்தல் அரசியலில், உலக வரலாற்றிலேயே இவ்வளவு தோல்வியை சந்தித்த ஒரு அரசியல் இயக்கம் மீண்டும் உற்சாகத்தோடு போட்டியிடுவது இங்கு தான்.
உலக வரலாற்றிலேயே கிடையாது, இந்திய துணைக் கண்டத்திலும் கிடையாது. முதல் தேர்தலில் 4.5 லட்சம், அந்த வாக்கை வாங்கின ஒரு கட்சி, கரைந்து காணாமல் போய்விடும். இல்லையென்றால், ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்து போய் இருக்கும்.
வாரிசு கிடையாது
மூன்று, நான்கு சீட் கேட்டு இருக்கோம். கூடுதல் சீட் போட்டு கொடுக்க வேண்டும். கேட்கிற தொகுதியை கொடுக்க வேண்டும் என்று சொல்லிட்டு திரிந்துவிடுவார்கள். எங்களுக்கு ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு சின்னத்தை கொடுப்பார்கள். வாக்குக்கு காசு கொடுக்கவில்லை. நானும் முதல்வர் மகனோ, அமைச்சரின் வாரிசு கிடையாது. கொளுத்த பணத்தை வைத்து கொண்டு அதனை பாதுகாக்க கட்சி ஆரம்பிக்கவில்லை. ஜாதி சொல்லவில்லை, மதம் சொல்லவில்லை.
என்ன வித்தியாசம்
சாராயம் ஒரு ஆண்டிற்கு ஐம்பதாயிரம் கோடி. பாலின் சந்தை மதிப்பு ஓராண்டுக்கு மூன்று லட்சம் கோடி. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்ற கனவு, துடிப்பு உள்ளது. நாங்கள் காசை முன்னிறுத்தவில்லை. ஆக சிறந்த கருத்தை முன்வைக்கிறோம். கோடிக்கணக்கான ரூபாயை தேர்தல் களத்தில் கொட்டவில்லை.
புனிதமான கொள்கைகளை முன் வைக்கிறோம். மாற்றம் எனக் கூறி கட்சி தொடங்குகிறார்கள். லாபம் ஈட்டு தொழிலாக அரசியல் மாறிவிட்டது. அதிமுக, திமுக கூட்டணியில் என்ன வித்தியாசம் உள்ளது. ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் வருகிறது ஆனால் என்ன மாறுதல் நடக்கிறது. இவ்வாறு சீமான் பேசினார்.
சீமான் ஒரு வசன வியாபாரி .... கட்சியை விக்கமாட்டார் .... வாடகைக்குத்தான் விடுவார்.... கிறித்துவ நிதி , ஜாதிக்காரர்கள் நிதி ... மணல் நிதி .... குவாரி நிதி ..... நிதி .... நிதி ..... நிதி... ஆமைக்குஞ்சுகள் வளர்ப்பு நிதி ......உதய நிதி மாதிரி .... சீமான்நிதி ..........
கொள்கையின் குணக்குன்றே.உனக்கு இருக்கும் தைரியம் யாரிடத்திலும் இல்லை. 234 தொகுதிகளில் பாதி இடங்களில் பெண் வேட்பாளர்களை நிறுத்தி திருட்டு தீயமுக வின் பெண்கள் வளர்ச்சியை தோலுரித்து தொங்கவிட்ட வீர மகனே கஜினி முகமது தளராது படையெடுத்த மாதிரி நீயும் தளராது போட்டியிட்டு கடைசியில் வெற்றிக்கனி பறிக்க வாழ்த்துக்கள்.
உன்னுடைய வெத்துவேட்டு வாய்ஜாலத்தை மக்கள் மதிக்க வில்லை நீ அள்ளி தெளிக்கும் புளுகுகளை எப்படி நடத்திகாட்டுவாய், உன் திட்டங்களுக்கு எப்படி பணம் வரும் தெளிவாக பேசினால் நல்லது
எப்போவும் வெற்றி தான் போங்க
இலங்கை காசு, கிறிஸ்தவ காசு, ரவுடி தும்பிகளிடம் காசு என்று பல வழிகளில் பணம் வருகிறது இன்னும் 40, 50 ஆண்டுகள் ஆனாலும் இப்படிதான் இருப்பாய்.
ஆதாரம் இருக்கிறதா?
பிட்சை எடுத்து தான் வாழறன் என்று சொல்லறான், ஆனா இரண்டு 50 லட்சம் ரூவா கார், வருஷம் இரண்டரை லச்சம் வாடகை வீடு, மகன் வருசத்துக்கு 20 லட்சம் குடுத்து அமெரிக்கன் ஸ்கூல்ல இங்கிலிஷ் மெடியத்துல படிப்பிக்கிறான், பணக்கார பிச்சைக்காரன்
அதுத தேர்தலில் இதையும் முறியடித்து புதிய உச்சத்தை தொட வாழ்த்துக்கள்.
சீமான் உங்கள் கட்சிக்கு பணத்தோல்வி கிடையாது . அதனால் எவ்வளவு பதவித்தோல்வி வந்தாலும் கவலை இல்லை .பணம் வருவது நின்றால்தான் பிரச்னை. கட்சி காணாமல் போய்விடும் .
பேச்செல்லாம் நல்லா வக்கனையாத்தான் இருக்கு??
ஆனால் செய்கை ஒண்ணுமில்லையே??
மாடுகள் மாநாடு ,மரங்கள் மாநாடு, மலை மாநாடு , கடல் மாநாடு என்று திரிந்துவிட்டு தேர்தல் வந்ததால் மக்கள் நியாபகம் வந்ததோ?? பெட்டிகள் வாங்கி பத்திரப்படுத்தியதை நா அறியாது உங்கள் கரங்கள் அறியுமில்லையா??
இன்னும் ஆயிரம் தோல்வி உறுதிமேலும்
-
போலீஸ் செய்திகள் மின்சாரம் தாக்கி பலி
-
மாவட்டத்தில் 218 மனுக்களில்... 160 ஏற்பு! 7 தொகுதிகளில் 43 தள்ளுபடி
-
நெடுஞ்சாலை குப்பைகளில் தீ ;வாகன ஓட்டிகள் கடும் அவதி
-
பதற்றம் நிறைந்த ஓட்டுச்சாவடிகள் :சப் கலெக்டருடன் எஸ்.பி., ஆலோசனை
-
பொறியியல் கல்லுாரி விளையாட்டு விழா
-
வராஹி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமி பூஜை