இம் என்றால் வனவாசம், ஏன் என்றால் சிறைவாசம்; இது திமுகவின் அடக்குமுறை என்கிறார் நயினார்
சென்னை: இம் என்றால் வனவாசம், ஏன் என்றால் சிறைவாசம், இது தான் திமுகவின் அடக்குமுறை என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
சாத்தூரில் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: போதைப்பொருட்கள் விற்று, துபாய்க்கு ஓடியவர்கள் எல்லாம் ரெட் ஜெயன்ட் மூலமாக இன்று படம் எடுக்கிறார்கள்
சுதந்திர இந்தியாவில் எங்கு சென்றும் பிரசாரம் செய்யலாம். எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் தான். விஜய் கூட்டம் நடத்தும் போது,சரியான முறையில் ஏற்பாடுகளை செய்ய தெரிவில்லை.
அடக்குமுறை
இதுவரையிலும் யார் வேட்பாளர், எந்த இடத்தில் கூட்டம் போடுகிறார்கள் என்பது தெரியவில்லை. அது ஒருபுறம் குற்றச்சாட்டு. திமுகவை பொறுத்தவரைக்கும் அடக்குமுறை ஆட்சி. இம் என்றால் வனவாசம், ஏன் என்றால் சிறைவாசம், இது தான் திமுகவின் அடக்குமுறை. பொய்யை திரும்ப, திரும்ப சொன்னால் கோயபல்ஸ் தத்துவம் மாதிரி உண்மை ஆகிவிடும் என முதல்வர் நினைக்கிறார். அது நிச்சயமாக நடக்காது. குடும்ப ஆட்சிக்கு எதிராக ஒரு போர்க்களம்.
குற்றச்சாட்டு
தமிழகத்தில் மெஜாரிட்டி இடங்களில் நிச்சயமாக தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். திமுகவும், தவெகவும் எங்களுக்கு எதிராக களத்தில் நிற்கிறார்கள் என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். அர்த்தமில்லாத குற்றச்சாட்டு, பேச்சு, செயல். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தமிழகத்தை பற்றி என்ன தெரியும். வேணும் என்றால் முதல்வர் ஸ்டாலினிடம் மம்தா பானர்ஜி தெரிந்து கொள்ளட்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
இம் என்றால் வனவாசம், ஏன் என்றால் சிறைவாசம் என்றால் நயினார் எத்தனை ஆண்டுகள் வனவாசம் சிறைவாசம் சென்றார்? என்று திமுகவினர் கேட்கமாட்டார்களா?
அதை பற்றி திராவிடர்கள் தமிழக மக்களிடம் கேட்டால் நன்றாக சொல்லூவார்கள்.
இது கருணாநிதி கூறிய வசனம்
நயினார் அண்ணே அது என்ன திமுக அடக்கு முறைன்னு சொல்றீக. திமுகவின் ஆட்சி முறைன்னு தானே சொல்லணும். க உ பீஸ் ரொம்ப வருத்தப்படுவாங்க அண்ணே..மேலும்
-
தனியார் பஸ் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
-
இணைப்பு சாலையில் ஓட்டுநர்கள் அடாவடி: வாகன ஓட்டிகள் அவதி
-
ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி விட்ட கும்மிடி., அ.தி.மு.க., வேட்பாளர்
-
திருவள்ளூர் மாவட்டம் இனிதாக
-
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச 'நீட்' தேர்வு பயிற்சி
-
மகளிருக்கு மீண்டும் தாலிக்கு தங்கம் :அ.தி.மு.க., வேட்பாளர் அரி வாக்குறுதி